சசிகலா-ஓபிஎஸ் ஒரே காரில் அதிமுக பொதுக் குழு விரைகிறார்கள்..??? இதற்கு ராஜன் செல்லப்பா சொல்றத கேளுங்க.

By Ezhilarasan BabuFirst Published Jun 22, 2022, 6:59 PM IST
Highlights

அதிமுக பொதுக்குழு சசிகலா வருவதற்கான வாய்ப்பே இல்லை, அதைப்பற்றி பேச வேண்டிய அவசியமும் இல்லை என மதுரை மாநகராட்சியின் முன்னாள் மேயரும்  மதுரை அதிமுக புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர்  ராஜன் செல்லப்பா கூறியுள்ளார்.

அதிமுக பொதுக்குழு சசிகலா வருவதற்கான வாய்ப்பே இல்லை, அதைப்பற்றி பேச வேண்டிய அவசியமும் இல்லை என மதுரை மாநகராட்சியின் முன்னாள் மேயரும்  மதுரை அதிமுக புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர்  ராஜன் செல்லப்பா கூறியுள்ளார். அதிமுகவை வழி நடத்தும் ஆற்றல் எடப்பாடி பழனிச்சாமி இடம் மட்டும் தான் இருக்கிறது, ஓபிஎஸ்  சுக்கு அந்த வாய்ப்பு இல்லை என அவர் கூறியுள்ளார்.

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக அதிமுகவுக்கு ஒற்றை தலைமை வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்து வருகிறது. குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர் இந்த முழக்கத்தை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் நாளை நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிச்சாமி ஒற்றைத் தலைமையாக நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பன்னீர்செல்வம், இரட்டை தலைமையே நீடிக்க வேண்டும், இல்லையெனில் பொதுக்குழுவை ஒத்தி வைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகிறார். ஆனாலும் கட்சியின் 90 சதவீத மாவட்ட செயலாளர்கள், மற்றும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருந்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்: கருணாநிதி ஸ்டாலினுக்கு நடுவில் விஜய்.. எதிர்கால முதலரே என பன்ச்.. அடங்காத தளபதி ரசிகர்கள்.

நிர்வாகிகள் மத்தியில் தனக்கு செல்வாக்கு இல்லாததை உணர்ந்துள்ள பன்னீர்செல்வம் இன்று மாலை தனது முடிவை அறிவிப்பதாக கூறியுள்ளார். இது ஒருபுறம் உள்ள நிலையில் கட்சியில் பழனிசாமிக்கு இந்த அளவிற்கு ஆதரவு பெருக காரணம் என்ன என்பது குறித்தும், ஓ. பன்னீர்செல்வம் சருக்கியது எங்கு என்பது குறித்தும் ராஜன் செல்லப்பா தனியார்  யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார். அதில், இரட்டை தலைமையின் கீழ் கட்சி சந்தித்த தேர்தல்கள் அனைத்திலும் தோல்விகளையே சந்தித்துள்ளது. இரட்டை தலைமையின் கீழ் கட்சியில் எந்த முடிவு எடுப்பதிலும் தாமதம் ஏற்படுகிறது. எனவே கட்சிக்கு ஒற்றைந் தலைமை வேண்டும் என்பது தொண்டர்களின் மனநிலை, மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே நான் இதைக் கூறினேன். இப்போது அது  செயல்வடிவம் பெற்றுள்ளது.

பன்னீர்செல்வம் முதலமைச்சராக இருந்திருக்கலாம் அவரின் தியாகத்தை, பெருந்தன்மையை நாங்கள் குறைத்து மதிப்பிடவில்லை, அதற்கு உரிய மரியாதை அளிக்கிறோம். அதேபோல எடப்பாடி  பழனிச்சாமியும் 1989 சட்டமன்ற தேர்தலில் ஜெயலிதாவின் சேவல் அணியில் நின்று சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கடுமையான நெருக்கடிக்கு மத்தியிலும் 4 ஆண்டுகள் ஆட்சியை நடத்திக் காட்டினார். நல்ல விசுவாசி என்பதைவிட யார் கெட்டிக்காரர் என்பதை நாம் பார்க்க வேண்டும். பழனிச்சாமி தலைமைப் பண்பை வளர்த்துக் கொண்டுள்ளார். எதிர்க்கட்சிகளுக்கு துணிச்சலாகவும் பதிலளிப்பவராக  உள்ளார் எனக் கூறியுள்ளார். 

அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு சசிகலாவும் ஓ .பன்னீர்செல்வம் ஒரே காரில் வரப்போவதாக சசிகலா ஆதரவாளர்கள் கூறி வருகிறார்களே என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ள அவர், மதிப்பிற்குரிய அம்மையாரைப் பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை, இதேபோல அருமை அண்ணன்  ஓ.பன்னீர்செல்வம் வருவதற்கான வாய்ப்பே இல்லை, அவர்கள் சேர்ந்து வருவதற்கான வாய்ப்பு இல்லை, முதலில் பொதுக்குழுவுக்கு அவர்கள் எப்படி வரமுடியும், அவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளதா? அப்படி அனுப்பப்பட்டிருக்க வாய்ப்பு இல்லை. அந்த சிந்தனைக்கு நாம் செல்ல வேண்டியதுமில்லை. 

இதையும் படியுங்கள்:  ஓபிஎஸ்சை கதறவைத்துவிட்டு, கல்யாணத்தில் பாட்டு பாடி என்ஜாய் பண்ண ஜெயக்குமார்.

ஓ.பன்னீர்செல்வம் வரவேண்டும், அவர் வரவேண்டும் என்றுதான் நாங்கள் எதிர்பார்க்கிறோம். அவர் வந்து நல்ல விஷயங்களுக்கு அச்சாரமாக இருக்கவேண்டும். எப்படி பல்வேறு நேரங்களில் பல்வேறு விஷயங்களை அவர் முன்மொழிந்தாரோ அதுபோல இதைச் செய்ய வேண்டும். பெரும்பான்மையானவர்கள் எதைச் சொல்கிறார்களோ அந்த கருத்தை ஒருங்கிணைப்பாளர் ஏற்றுக்கொள்ள வேண்டும். நாங்கள் சொல்கிற கருத்தை அன்புமிகு அண்ணன் ஓபிஎஸ் முன்மொழிய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
 

click me!