கருணாநிதி ஸ்டாலினுக்கு நடுவில் விஜய்.. எதிர்கால முதலரே என பன்ச்.. அடங்காத தளபதி ரசிகர்கள்.

Published : Jun 22, 2022, 06:03 PM IST
கருணாநிதி ஸ்டாலினுக்கு நடுவில் விஜய்.. எதிர்கால முதலரே என பன்ச்.. அடங்காத தளபதி ரசிகர்கள்.

சுருக்கம்

வாழ்ந்த முதல்வர், வாழும் முதல்வர், வருங்கால முதல்வர் என என்ற வாசகத்துடன் கலைஞர் கருணாநிதி மற்றும் மு.க ஸ்டாலின் இடையே நடிகர் விஜய் நிற்பது போன்ற போஸ்டரை விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ளனர். விஜய்யின் பிறந்தநாளை ஒட்டி ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது .

வாழ்ந்த முதல்வர், வாழும் முதல்வர், வருங்கால முதல்வர் என என்ற வாசகத்துடன் கலைஞர் கருணாநிதி மற்றும் மு.க ஸ்டாலின் இடையே நடிகர் விஜய் நிற்பது போன்ற போஸ்டரை விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ளனர். 

விஜய்யின் பிறந்தநாளை ஒட்டி ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. மதுரை  தெற்கு மாவட்ட விஜய் மக்கள் மன்றம் சார்பில் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் குறித்து பலரும் பல வகையில் கமெண்ட் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் விஜய் இன்று 48 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர். திரைத்துறையை சேர்ந்த பல்வேறு நடிகர் நடிகைகளும் விஜய்க்கு வாழ்த்து கூறி வருகின்றனர். இதற்கிடையில் விஜய் மக்கள் மன்றத்தின் சார்பில் அதன் நிர்வாகிகள் பலவிதமான சுவரொட்டிகளை தயாரித்து அதன்மூலம் நடிகர் விஜய்க்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

போஸ்டர்கள், கட்டவுட்கள், அதில் வித்தியாசமான வாசகங்கள் என்றாலே அதற்கு பெயர் போனது மதுரைதான், அந்த வகையில் நடிகர் விஜய் பிறந்த நாளில் விஜய் மக்கள் மன்றத்தினர் பலரையும் கவர்ந்திழுக்கும் வகையிலான வாசகங்களுடன் போஸ்டர் ஒட்டியுள்ளனர். இந்நிலையில் மதுரை தெற்கு மாவட்ட விஜய் ரசிகர் மன்றத்தினர் ஒட்டியுள்ள போஸ்டர் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,

அந்த போஸ்டரில் அதிமுகவின் தற்போதைய அரசியல் சூழ்நிலையே குறிக்கும் வகையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அதில் பொதுக்குழு இல்லை.. போட்டி இல்லை.. என்றும் நிரந்தர தலைமையே உன்னை வணங்குகிறோம் என அவரது ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர். இதைப் பல அதிமுகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதே போல மற்றுமொரு போஸ்டர் வைரலாகி வருகிறது, மதுரை காரர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல நாங்கள் என திண்டுக்கல் விஜய்  மக்கள் இயக்கத்தினர் வித்தியாசமான யோசனையுடன் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் விஜய் மக்கள் மன்றத்தினர் போஸ்டரில், Cரிச்சா சிவன்டா Mறைச்சா எமன்டா என பஞ்ச் டயலாக் கூறுவதுபோல CM என குறிப்பிட்டுள்ளனர்.  நடிகர் விஜய் தான் தமிழகத்தின் முதல்வர் என குறிப்பிடும் வகையில் இவ்வாறு வசனம் அதில் இடம்பெற்றுள்ளது. சென்னை முதல் கன்னியாகுமரி வரை அவரது ரசிகர்கள் லட்சக்கணக்கில் செலவு செய்து விதவிதமான போஸ்டர்கள், பேனர்கள் டிஜிட்டல் கார்டுகள் என மிரட்டி வருகின்றனர். இன்னும் சில இடங்களில் ஸ்பெஷல் ஷோக்கள் களைகட்டி வருகிறது. 

இதேபோல் அதே மதுரை தெற்கு மாவட்டம் கொள்கைபரப்பு தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் வாழ்ந்த முதல்வர், வாழும் முதல்வர் நல்லாசியுடன் வருங்கால முதல்வருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் என குறிப்பிட்டு, முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி, தற்போதைய முதல்வர் மு.க ஸ்டாலின் இடையில் சிரித்தபடி விஜய் பவ்யமாக நிற்கும் போஸ்டர் இடம்பெற்றுள்ளது. எதிர்கால முதல்வர் விஜய் என்பதை குறிக்கும் வகையில் இவ்வாறு போஸ்டரை அவரது ரசிகர்கள் ஒட்டியுள்ளனர். இந்த போஸ்டர்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது குறிப்பிடத்தக்கது.  
 

PREV
click me!

Recommended Stories

டெப்பாசிட் வாங்குவாரா? சுந்தர் சி-யை டம்மியாக்கிய PTR பழனிவேல் தியாகராஜன்!
Premalatha Vijayakanth: அட்ரா சக்க... கூட்டணியில் இருந்தாலும் திமுக ஆட்சியின் தவறை சுட்டிக்காட்டிய பிரேமலதா!