பதவியே இல்லாமல் மோடியை எதிர்த்தார் ச‌சிகலா... Wait And See.. கருணாஸ் மறைமுக எச்சரிக்கை..!

Published : Jan 29, 2021, 10:36 AM ISTUpdated : Feb 10, 2021, 04:31 PM IST
பதவியே இல்லாமல் மோடியை எதிர்த்தார் ச‌சிகலா... Wait And See.. கருணாஸ் மறைமுக எச்சரிக்கை..!

சுருக்கம்

2 ஆண்டுகளாக தொகுதி பக்கமே செல்லாததால் திருவாடனை தொகுதியில் இருந்து மாறி வேறு தொகுதியில் போட்டியிட உள்ளதாக முக்குலத்தோர் புலிப்படைத் தலைவரும் திருவாடாணை தொகுதி எம்எல்ஏவுமான கருணாஸ் கூறியுள்ளார்.

2 ஆண்டுகளாக தொகுதி பக்கமே செல்லாததால் திருவாடனை தொகுதியில் இருந்து மாறி வேறு தொகுதியில் போட்டியிட உள்ளதாக முக்குலத்தோர் புலிப்படைத் தலைவரும் திருவாடாணை தொகுதி எம்எல்ஏவுமான கருணாஸ் கூறியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட கோவில்பட்டியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எம்எல்ஏ கருணாஸ்;- கூவத்தூரில் என்ன நடைபெற்றது என்று அங்கிருந்த அனைவருக்கும் தெரியும். சசிகலா பற்றி இன்று கூறுபவர்கள், அன்று என்ன சொன்னார்கள் என்பது அனைத்து ஊடகங்களிலும் உள்ளது. பிரேமலதா விஜயகாந்த் கருத்து வரவேற்க கூடியது. எடப்பாடி பழனிச்சாமி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் கிடையாது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். அதிமுகவிற்கு பின் பாஜக இருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

ஜெயலலிதா, மம்தா பானர்ஜி கூட ஆட்சி அதிகாரத்தை வைத்து தான் பிரதமர் மோடியை எதிர்த்தார்கள். ஆனால், சசிகலா எந்த ஒரு பதவியிலும் இல்லாமல் மோடியின் முடிவை மாற்றி அமைத்ததாகவும் கூறிய அவர் Wait and See என மறைமுகமாக எச்சரிக்கை விடுத்தார். 

மேலும், முக்குலத்தோர் புலிப்படை அமைப்புக்கு அரசியல் அடையாளத்தை கொடுத்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அதற்கு உறுதுணையாக இருந்தவர் சசிகலா. இதில் மாற்றுக் கருத்தில்லை. ஜெயலலிதா, சசிகலா உருவாக்கிய இந்த ஆட்சிக்கு சிறு இடையூறும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக நான் மிகவும் கவனமாக இருக்கிறேன் என எம்எல்ஏவுமான கருணாஸ் கூறியுள்ளார். 

PREV
click me!

Recommended Stories

ஆபரேஷன் சிந்தூரின் முதல் நாளிலேயே பாகிஸ்தானிடம் அடி வாங்கியது இந்தியா..! காங்கிரஸ் தலைவர் சர்ச்சை பேச்சு..!
சமத்துவப் பாட்டன் பாரதி..! சாதிவெறி ஐயா ஈவேரா..! அதிர வைக்கும் நாம் தமிழர் கருத்தரங்கம் போஸ்டர்