சசிகலா உடல்நிலையில் திடீர் மாற்றம்... மருத்துவமனை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!

By vinoth kumarFirst Published Jan 29, 2021, 9:56 AM IST
Highlights

சசிகலாவிற்கு 6 நாட்களுக்கு பிறகு ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரையின் அளவு மாறுப்பட்டு வருவதாக விக்டோரியா மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது. 

சசிகலாவிற்கு 6 நாட்களுக்கு பிறகு ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரையின் அளவு மாறுப்பட்டு வருவதாக விக்டோரியா மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது. 

சிறையில் இருந்த சசிகலாவுக்கு கடந்த 20-ம் தேதி அன்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் பெங்களூரு, சிவாஜி நகரில் உள்ள பெளரிங் அரசு மருத்துவமனையில் முதலில் அனுமதிக்கப்பட்டார், பின்னர் அங்கிருந்து விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. பின்னர், அவரது சீராக உள்ளதாகவும், கொரோனா தொற்றில் இருந்து விடுப்பட்டு விட்டதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்திருந்தது. அவ்வப்போது சசிகலா உடல்நிலை குறித்து விக்டோரியா மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், விக்டோரியா மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில்;- 6 நாட்களுக்குப் பிறகு சசிகலாவிற்கு மீண்டும் ரத்த அழுத்தம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவு தொடர்ந்து மாறுபட்டு வருவதாகவும், அவருக்கு இன்சுலின் மருந்து செலுத்தப்படுவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

நேற்றைய நிலவரப்படி சசிகலா ரத்தத்தில் சர்க்கரை அளவு, 278ஆக உள்ளளது. சிகிச்சைக்கு சசிகலா ஒத்துழைப்பு தருகிறார். அவரது உடல்நிலை சீராக உள்ளது என்றும் மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

click me!