நீங்க யார் பக்கம்? எடப்பாடி Vs ஓபிஎஸ்.. சசிகலா சொன்ன அந்த பேர்.. அதிர்ச்சியில் நிர்வாகிகள் !

By Raghupati RFirst Published Jul 31, 2022, 8:15 PM IST
Highlights

அதிமுக மூத்த தலைவர் பண்ருட்டி ராமசந்திரனை சென்னை அசோக் நகரில் உள்ள அவரது இல்லத்தில் சசிகலா இன்று சந்தித்து பேசினார்.

அதிமுக உட்கட்சி மோதல் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து கொண்டே வருகிறது. அதிமுக பொதுக்குழுவில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அதோடு அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலும் அறிவிக்கப்பட்டு உள்ளது. தேர்தல் ஆணையத்தில் பொதுக்குழுவிற்கு எதிராக இருக்கும் வழக்கில் மட்டும் சாதகமாக தீர்ப்பு வந்தால், எடப்பாடி அதிமுகவில் அசைக்க முடியாத சூழ்நிலை ஏற்படும்.

ஆனால் எடப்பாடிக்கு எதிராக தேர்தல் ஆணையத்திலும், நீதிமன்றத்திலும் ஓ பன்னீர்செல்வம் அடுத்தடுத்து முறையிட்டு வருகிறார். இந்த நிலையில் அதிமுக மூத்த தலைவர் பண்ருட்டி ராமசந்திரனை சென்னை அசோக் நகரில் உள்ள அவரது இல்லத்தில் சசிகலா இன்று சந்தித்து பேசினார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, ‘ நான் இங்கு என்னுடைய மூத்த அண்ணனை பார்க்க வந்தேன். அரசியல் விஷயமாக கலந்து பேசினேன். என்னை பொருத்தவரை அதிமுகவில் உள்ள அனைவரும் எனக்கு வேண்டியவர்கள். 

மேலும் செய்திகளுக்கு..உண்மையான அதிமுக எடப்பாடி தான்.. மகிழ்ச்சியில் இருந்த இபிஎஸ் தரப்புக்கு 'ஓபிஎஸ்' கொடுத்த ட்விஸ்ட் !

எல்லோரும் சேர்ந்து ஒன்றாய் இணைந்து பயணிக்க வேண்டும் என்பதே எனது ஆசை. தலைவர் இந்த கட்சியை தொடங்கும்போது சாதி, மதம் பார்த்ததில்லை. அந்த அடிப்படை கொள்கை இந்த நிமிடம் வரை எங்கள் மனதில் உள்ளது. அதிமுக எல்லோரையும் ஒன்றாக நினைக்கும் இயக்கம். அது மதமாக இருந்தாலும் சரி, சாதியாக இருந்தாலும் சரி. அதன் அடிப்படையிலேயே எனது நகர்வுகள் இருக்கும்.

அதிமுகவில் உள்ள அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்ற அடிப்படையில் 50 ஆண்டுகளாக இருந்துள்ளது. அதை நிலைநிறுத்துவதே எனது கடமை. என் 2 தலைவர்களுக்கும் நிச்சயம் நான் அதை செய்வேன். இதெல்லாம் காலப்போக்கில் சரியாகிவிடும் என்பது எனது திடமான நம்பிக்கை. எம்.ஜி.ஆர் மறைவுக்கு பிறகும் கூட இதுபோல் நடந்துள்ளது. ஒரு காலக்கட்டத்தில் எல்லோரும் ஒன்றாக இணைந்தார்கள்.  அதேபோல் இப்போதும் நிச்சயம் நிகழும். நான் எந்தப்பக்கமும் இல்லை. 

மேலும் செய்திகளுக்கு..ஆகஸ்ட் 3 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !

தொண்டர்கள், தமிழக மக்கள் என்ன நினைக்கிறார்களோ. அதுதான் எனது செயல்பாடாக இருக்கும். பொதுமக்கள் எங்களை எதிர்பார்க்கிறார்கள். திமுக அரசு தேர்தல் அறிக்கையில் சொன்னதைகூட செய்யவில்லை என மக்கள் சொல்கிறார்கள். திமுக அரசு ஏழை எளிய மக்களுக்காக ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை எல்லாம் ரத்து செய்வதாக மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்’ என்று பேசினார்.

மேலும் செய்திகளுக்கு..படம் பாக்குறியா தம்பி.. 15 வயது சிறுவனுடன் ஓட்டம்பிடித்த 4 குழந்தைகளின் தாய் - அடேங்கப்பா.!

click me!