சசிகலாவை ஒரு வாரம் யாரும் பார்க்க முடியாது.. உறவினர்கள் கொடுத்த அதிர்ச்சி தகவல்..!

Published : Feb 11, 2021, 11:31 AM IST
சசிகலாவை ஒரு வாரம் யாரும் பார்க்க முடியாது.. உறவினர்கள் கொடுத்த அதிர்ச்சி தகவல்..!

சுருக்கம்

பெங்களூருவில் இருந்து சென்னை வந்த சசிகலா தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும், ஒரு வாரம் தனிமையில் இருப்பார் என உறவினர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்

பெங்களூருவில் இருந்து சென்னை வந்த சசிகலா தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும், ஒரு வாரம் தனிமையில் இருப்பார் என உறவினர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்

சொத்து குவிப்பு வழக்கில் 4 வருடம் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த சசிகலா கடந்த 27ம் தேதி விடுதலையானார். இதனிடையே, அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். பின்னர், மருத்துவர்கள் அறிவுரைப்படி பெங்களூருவில் சொகுசு விடுதியில் ஒருவாரம் தனிமைப்படுத்தி கொண்டார்.

இதனையடுத்து, கடந்த நாட்களுக்கு முன் பெங்களூருவில் இருந்து சசிகலா தமிழகம் வந்தடைந்தார். அவருக்கு வழிநெடுகிலும் தொண்டர்கள்  உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்நிலையில், 2 நாட்கள் ஓய்வுக்கு பின் அதிமுக முக்கிய நிர்வாகிகள், மற்றும் அதிமுக கூட்டணி கட்சி தலைவர்களுடன் சசிகலா சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியானது. 

ஆனால், பெங்களுருவில் இருந்து சென்னை திரும்பிய சசிகலா தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து ஒரு வாரகாலம் சசிகலா தனிமையில் இருப்பார் என்றும் வரும் 17ம் தேதி முதல் ஆதரவாளர்கள் மற்றும் நலன்விரும்பிகளை சந்திக்க உள்ளார் எனவும் அவரது உறவினர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். 

PREV
click me!

Recommended Stories

ஆபரேஷன் சிந்தூரின் முதல் நாளிலேயே பாகிஸ்தானிடம் அடி வாங்கியது இந்தியா..! காங்கிரஸ் தலைவர் சர்ச்சை பேச்சு..!
சமத்துவப் பாட்டன் பாரதி..! சாதிவெறி ஐயா ஈவேரா..! அதிர வைக்கும் நாம் தமிழர் கருத்தரங்கம் போஸ்டர்