தீய சக்தி திமுகவை வீழ்த்துவதிலேயே நாம் குறியாக இருக்க வேண்டும்.. தொண்டர்களை தயார்படுத்தும் டிடிவி தினகரன்.

Published : Feb 11, 2021, 11:18 AM IST
தீய சக்தி திமுகவை வீழ்த்துவதிலேயே நாம் குறியாக இருக்க வேண்டும்.. தொண்டர்களை தயார்படுத்தும் டிடிவி தினகரன்.

சுருக்கம்

சிலரின் சுயநலத்தால் குறுகிய புத்தியால், திமுக என்னும் தீய சக்தி மீண்டும் எழுந்து விடுவதை தடுப்பதிலும், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உண்மையான நல்லாட்சியை தமிழகத்திற்கு அளித்திடுவதிலும் மட்டுமே நம்முடைய முழு கவனமும் இருக்க வேண்டும்.    

நமது தியாகத் தலைவிக்கான வரவேற்ப்பை தமிழகத்தின்  பெருவிழாவாக மாற்றியவர்கள் புரட்சித்தலைவி அம்மாவின் உண்மை தொண்டர்கள், வரும் காலத்திலும் இதே உணர்வோடு ஒற்றுமையாக நின்று தீயசக்தி திமுகவை வீழ்த்துவதிலேயே முழு கவனமும் இருக்க வேண்டும் என அமமுக  பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பல இடங்களில் கட்சிகளுக்கு அப்பாற்பட்ட பெரியவர்கள், தாய்மார்கள், இளைஞர்கள், இளம் பெண்கள், சிறுவர், சிறுமியர் என மகிழ்ச்சி பொங்க சின்னம்மாவை வரவேற்ற அத்தனை பேருக்கும் மனப்பூர்வமான நன்றி.. அதே நேரத்தில் எந்த இடத்திலாவது பொது மக்களுக்கு ஏதேனும் அசவுகரியம் ஏற்பட்டிருந்தால் அதற்காக அவர்களிடத்தில் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். அதிகாரத்தில் இருப்போருக்கு ஏற்றபடி ஆடிய ஒருசில அதிகாரிகளைத் தவிர, வெயிலிலும், குளிரென்றும் பாராமல் நமக்கு பாதுகாப்பு அளித்து, போக்குவரத்தை ஒழுங்கு செய்து தந்த நம்முடைய உண்மையான உணர்வுகளை புரிந்து நடந்து கொண்ட அனைத்து காவல்துறை நண்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளைதெரிவித்துக்கொள்கிறேன். 

இது தொடக்கம்தான் இதே உணர்வை களத்தில் காண்பித்து,  நாம் அனைவரும் ஒற்றுமையோடு நின்று இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிள்ளைகள் என்பதை நிரூபிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. சிலரின் சுயநலத்தால் குறுகிய புத்தியால், திமுக என்னும் தீய சக்தி மீண்டும் எழுந்து விடுவதை தடுப்பதிலும், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உண்மையான நல்லாட்சியை தமிழகத்திற்கு அளித்திடுவதிலும் மட்டுமே நம்முடைய முழு கவனமும் இருக்க வேண்டும். 

புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு அளவிடமுடியாத தியாகங்களைப் புரிந்த நம் சின்னம்மா அவர்களையும், உண்மை தொண்டர்களோடு நிற்பதால் என்னையும்,  உச்சக்கட்ட பக்கத்திலுள்ள ஒரு சிலர் மிகவும் தரம் தாழ்ந்த முறையில் பேசுவதை ஒதுக்கித் தள்ளிவிட்டு நம் எதிரியை, தமிழ்நாட்டு மக்களின் எதிரியை களத்தில் வீழ்த்துவதே உங்களின் ஒரே நோக்கமாக இருக்க வேண்டும் என்று அன்போடும் உரிமையோடும் கேட்டுக்கொள்கிறேன். சத்திய போராட்டத்தில் நமது வெற்றியை நாளை சரித்திரம் பேசட்டும். இவ்வாறு டிடிவி தினகரன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 
 

PREV
click me!

Recommended Stories

தைரியம் இருந்தால் ரூபாய் நோட்டுகளில் காந்தி படத்தை மாற்றுங்க! பாஜகவுக்கு துணை முதல்வர் சவால்!
வேர் இஸ் அவர் லேப்டாப்..? முதல்வர் ஸ்டாலினின் தேர்தல் நாடகம்..! அடித்து ஆடும் இபிஎஸ்!