சசிகலாவின் நாகரீகமற்ற செயல்... விரக்தியில் நாம் தமிழர் சீமான்..!

By Thiraviaraj RMFirst Published Jul 13, 2021, 10:26 AM IST
Highlights

ஆடியோக்களை மீடியாக்களிலும், சமூக வலைதளங்களிலும் பகிர்ந்து வருகிறார். அப்படி பேசும் தொண்டர்களை அதிமுக அரசியலில் இருந்து நீக்கி வருகிறது.

ஒரு தலைவர் என்பதையும் மறந்து தன்னிடம் பேசும் தொண்ண்டர்களின் ஆடியோக்களை சசிகலா வெளியிடுவது நாகரீகமானது அல்ல என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கு பிறகு அதிமுகவை கைப்பற்றியே தீருவேன் என சபதமிட்டு தொண்டர்களுக்கு போன் செய்து பேசி வருகிறார் சசிகலா. அந்த ஆடியோக்களை மீடியாக்களிலும், சமூக வலைதளங்களிலும் பகிர்ந்து வருகிறார். அப்படி பேசும் தொண்டர்களை அதிமுக அரசியலில் இருந்து நீக்கி வருகிறது.

இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த சீமான், ''சசிகலா பேசும் ஆடியோக்கள் வெளியிடப்படுவதை ரசிக்கவும் இல்லை. ஏற்றுக்கொள்ளாவும் இல்லை. ஆடியோக்களை ரிலீஸ் செய்வது சரியான முறையும் இல்லை. சசிகலா பேசுவதை அவர் ஒரு தலைவர் என மதித்து தொண்டர்கள் அவருடன் பேசுகிறார்கள். அப்படி பேசுவதை பதிவு செய்து பொதுவெளியில், ஊடகத்தில் வெளியிடுவது என்பது தலைமை பண்புக்கானது அல்ல. 

தொண்டர்களை அழைத்து நேரடியாக உரையாடுங்கள். பொது இடங்களில் ஒன்று கூட்டி பேசுங்கள். அதுதான் சரியான முறை. இது தொடர்பாக நான் பலமுறை சசிகலாவிம் பேசிவிட்டேன். ஆடியோக்கள் வெளியிடுவது நிறுத்துங்கள். அது சரியானது அல்ல என அவரிடம் சொல்லிப்பார்த்து விட்டேன். ஆனால் அவர் நிறுத்திக் கொள்ளவில்லை. நான் பேசுவதைக் கூட உளவுத்துறை பதிவு செய்யும். ஆனால் பகிரங்கமாக வெளியிடாது. அப்படி பொதுவெளியில் வெளியிடுவது முறையான செயலும் அல்ல’’என சீமான் தெரிவித்துள்ளார்.

click me!