2026 ஆம் ஆண்டு நமது ஆட்சிதான்.. தொண்டரிடம் அடித்து சொன்ன சசிகலா.. கலக்கத்தில் இபிஎஸ், ஓபிஎஸ்..

By Ezhilarasan BabuFirst Published Jul 13, 2021, 10:12 AM IST
Highlights

சென்னையை சேர்ந்த புவனேந்திரன் என்பவருடன் சசிகலாவிடம் தொலைபேசி வாயிலாக பேசிய ஆடியோ ஒன்றும் வெளியாகி உள்ளது. அதில் அவர் கட்சியில் தலைவர்கள் மட்டும் சம்பாதித்து இன்று ராஜக்களாக உள்ளார்கள் ஆனால் தொண்டர்கள் அனைவரும் நடுரோட்டில் உள்ளார்கள்.

2026ஆம் ஆண்டு நமது ஆட்சியாக தான் இருக்க வேண்டும், எல்லாரையும் அரவணைத்து போவேன், ஒரு பெண்ணாக அதை நிச்சயம் என்னால் செய்ய முடியும் என சசிகலா தெரிவித்துள்ளார். தன்னிடம் பேசிய தொண்டரிடம் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். சிறையில் இருந்து விடுதலையான சசிகலா தேர்தலின் போது அரசியலில் இருந்து ஒதுங்கியிருப்பதாக அறிவித்தார். தற்போது தேர்தல் முடிந்து அதிமுக எதிர்கட்சியாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கட்சியை கைப்பற்றும் பகிரத முயற்சியில் ச சிகலா ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக அதிமுக தொண்டர்களுடன் அவர் தொலைபேசியில் உரையாடும் ஆடியோக்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்தவரிசையில் 

சென்னையை சேர்ந்த புவனேந்திரன் என்பவருடன் சசிகலாவிடம் தொலைபேசி வாயிலாக பேசிய ஆடியோ ஒன்றும் வெளியாகி உள்ளது. அதில் அவர் கட்சியில் தலைவர்கள் மட்டும் சம்பாதித்து இன்று ராஜக்களாக உள்ளார்கள் ஆனால் தொண்டர்கள் அனைவரும் நடுரோட்டில் உள்ளார்கள். நல்லவேளை அவரிடம் தமிழகத்தை ஒப்படைத்தீர்கள் இதுவே இந்தியாவை ஒப்படைத்து இருந்தால் ஓவ்வொரு ஸ்டேட்டாக விற்று இருப்பார்.நீங்கள் வந்து அதிமுக தலைமை அலுவலகத்தில் காலை வைத்தால் ஒட்டுமொத்த இந்தியாவே திரும்பி பார்ப்பது போல் இருக்கும். பதவியில் உள்ள அனைவருமே மறைமுகமாக உங்களுக்கு பயந்து கொண்டு வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். நீங்கள் வரவில்லை என்றால் நிச்சயம் அவர்கள் கட்சியை அழித்து விடுவார்கள் என புவனேந்திரன் தெரிவிக்க, உங்களை போன்றவர்களின் உதவியோடு கட்சியை மீண்டும் நான் கைப்பற்றுவேன் என ச சிகலா தெரிவித்துள்ளார். 

அதேபோல், ஈரோடு கோபால் என்பவரிடம் சசிகலாவிடம் பேசிய ஆடியோவில், தொண்டர்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் நிறைய நான் செய்ய வேண்டியது இருக்கிறது. கட்சியை முதலில் நல்லபடியாக சரி செய்து அம்மாவின் ஆட்சி மீண்டும் வரணும், அதற்காக என்னுடைய உழைப்பு முழுவதையும் நான் தருவேன். 2026ஆம் ஆண்டு நமது ஆட்சியாக தான் இருக்க வேண்டும். எல்லாரையும் அரவணைத்து போவேன், ஒரு பெண்ணாக அதை நிச்சயம் என்னால் செய்ய முடியும். என அவர் தெரிவித்துள்ளார். 

 

click me!