அதிமுகவை கைப்பற்றும் முயற்சியில் தொடர் தோல்வி.. சசிகலா அரசியலை விட்டு விலகுவதுதான் சரி.. ஜெயக்குமார் சரவெடி.!

Published : Apr 12, 2022, 07:21 AM IST
அதிமுகவை கைப்பற்றும் முயற்சியில் தொடர் தோல்வி.. சசிகலா அரசியலை விட்டு விலகுவதுதான் சரி.. ஜெயக்குமார் சரவெடி.!

சுருக்கம்

அதிமுகவை கைப்பற்றும் முயற்சி சசிகலாவுக்கு தொடர்ந்து தோல்வியை கொடுத்து வருகிறது. சசிகலா அரசியலில் இருந்து விலகிக் கொள்வது நல்லது. பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலா நீக்கம் செல்லும் என்ற தீர்ப்பை கேட்டு 1.50 கோடி தொண்டர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அதிமுகவை கைப்பற்றும் முயற்சி சசிகலாவுக்கு  தொடர்ந்து தோல்வியை கொடுத்து வருகிறது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். 

சசிகலா மனு தள்ளுபடி

சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கிய அதிமுகவின் பொதுக்குழு தீர்மானம் செல்லும்' என்று சென்னை உரிமையியல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதோடு, அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கியதை எதிர்த்து சசிகலா தொடர்ந்த வழக்கையும் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதை அதிமுக தொண்டர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர். இந்த தீர்ப்பு சசிகலாவை அதிர்ச்சி அடைய செய்தாலும் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய இருப்பதாக சசிகலா கூறியுள்ளார்.

ஆலோசனை

இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினர். இதனையடுத்து, சென்னை ராயப்பேட்டையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- பொதுச்செயலர் பதவியில் இருந்து சசிகலா நீக்கம் செல்லும் என்ற தீர்ப்பை அதிமுக தொண்டர்கள் வரவேற்றுள்ளனர்.

மகிழ்ச்சியில் தொண்டர்கள்

அதிமுகவை கைப்பற்றும் முயற்சி சசிகலாவுக்கு தொடர்ந்து தோல்வியை கொடுத்து வருகிறது. சசிகலா அரசியலில் இருந்து விலகிக் கொள்வது நல்லது. பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலா நீக்கம் செல்லும் என்ற தீர்ப்பை கேட்டு 1.50 கோடி தொண்டர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சசிகலாவுக்கு கட்சிக்கும் சம்பந்தமில்லை. சசிகலாவுக்காக யாரும் குரல் கொடுக்க மாட்டார்கள். அதிமுகவில் அனைவரும் ஒற்றுமையாகவே இருக்கிறோம். குழப்பத்திற்கு இடமில்லை. சசிகலாவுக்கும் அவரை சார்ந்தவர்களுக்கும் அதிமுகவில் ஒருபோதும் இடமில்லை என ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க;- எடப்பாடி கோட்டைக்குள் ‘கெத்து’ காட்டிய சசிகலா.. தீர்ப்புக்கு முன்பும், பின்பும் நடந்த ட்விஸ்ட் !!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!