திமுகவை எதிர்க்க அதிமுகவிற்கு வலிமை வேண்டும்...! நாடாளுமன்ற தேர்தலோடு முடிவு கட்டுகிறேன்- சூளுரைத்த சசிகலா

By Ajmal KhanFirst Published Sep 14, 2022, 10:09 AM IST
Highlights

மின் கட்டணங்களை உயர்த்தி மக்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடலா என சசிகலா கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் நாடாளுமன்ற தேர்தலோடு திமுகவிற்கு முடிவு கட்டுவோம் எனவும் சூளுரைத்துள்ளார்.
 

தொண்டர்களை சந்திக்கும் சசிகலா

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக 3 ஆக பிளவுபட்டுள்ளது. சசிகலா, ஓபிஎஸ், இபிஎஸ் என அதிகார போட்டியால் பிரிந்துள்ள9னர். இந்தநிலையில் பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் சசிகலா சேலத்தில் தனது சுற்றுப்பயணத்தை முடித்து ஈரோடு வந்தார். அப்போது பன்னீர்செல்வம் பூங்காவில் தொண்டர்களிடையே உரையாற்றினார்.  பெண் சிசு கொலை தடுக்க ஜெயல்லிதா கொண்டு வந்த திட்டம் தான் தொட்டில் குழந்தை திட்டம், தாலிக்கு தங்கம் திட்டம், அம்மா உணவுகம், மாணவர்களுக்கு மடிக்கணிணி என பல்வேறு மக்கள் நல திட்டங்களை கொண்டு வந்தவர் ஜெயலலிதா என குறிப்பிடாடர். ஆனால்  இந்த திமுக அரசு இந்த திட்டங்களுக்கு எல்லாம் மூடுவிழா நடத்தி வருவதாக குற்றம்சாட்டினர்.  15 மாத ஆட்சி் காலத்தில் திமுக எதையும் செய்யவில்லை என்றும் ஆவின் பால் விலை , சொத்து வரி உயர்வு , மின் கட்டண உயர்வு என பலவற்றை திமுக உயர்த்தி உள்ளதாகவும் , மின் கட்டண உயர்வால் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படுவதாகவும் விமர்சித்தார். 

அதிமுக ஆட்சியை காப்பாற்ற எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்கியது ஏன்..? சசிகலா கூறிய ரகசிய தகவல்

அதிமுகவிற்கு வலிமை வேண்டும்

மக்கள் விரேத திமுக அரசு விரைவில் தமிழகத்தில் பேருந்து கட்டணத்தை உயர்த்த உள்ளதாகவும் குறிப்பிட்டார். .மக்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடலா என்று கேள்வி எழுப்பிய சசிகலா,  திமுகவை எதிர்க்க அதிமுக வலிமையாக இருக்க வேண்டும் எனவே மீண்டும் அதிமுகவை வலிமையாக கொண்டுவருவது தான் எனது ஓரே  குறிக்கோள் என்றும் எவ்வித சோதனைகள் இயக்கத்திற்கு ஏற்பட்டாலும்  கட்சியை வலுப்படுத்தி யாரலும் அசைக்க முடியாத சக்தியாக மாற்றுவேன் என உறுதிபட கூறினார். எனவே வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவிற்கு முடிவு கட்டுவோம் எனவும் சசிகலா  சூளுரைத்தார்.

இதையும் படியுங்கள்

புலியை தெலுங்கானாவில் பார்த்து பயந்து ஓடிவந்து தமிழகத்தில் முறம் வீசுவதா..? தமிழிசையை விமர்சித்த முரசொலி

 

click me!