
அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டதை அக்கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் ரத்து செய்து அதிரடியாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது
பரபரப்பான சூழ்நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்று வரும் அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
முதல் தீர்மானமாக முடக்கப்பட்டுள்ள இரட்டை இலை சின்னத்தை மீட்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதைத்தொடர்ந்து அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா மட்டுமே என்றும், கடந்த ஆண்டு அக்கட்சியின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலாவின் நியனமம் ரத்து செய்யப்படுகிறது என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து, அதிமுக பொதுச் செயலாளர் என்ற பதவி இல்லாமலேயே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் ஒருங்கிணைப்புக் குழுவுக்கு அனைத்து அதிகாரங்களும் வழங்கப்படும் என்றணு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
பொதுச் செயலாளர் நியமனம் ரத்து செய்யப்பட்டதையடுத்து சசிகலாவின் அனைத்து அதிகாரங்களும் பறிக்கப்பட்டுள்ளன.