முத்துமாரி கோயிலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்த சசிகலா.. வழிநெடிகிலும் வரவேற்பு.. 2000 போலிசார் குவிப்பு.

By Ezhilarasan BabuFirst Published Feb 8, 2021, 1:31 PM IST
Highlights

ஒசூர் மாநகரின் 4 இடங்களில் அமமுக சார்பில் வரவேற்பு வழங்கப்பட்டது, தர்கா பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் நேரடியாக வழிபட்ட சசிகலா தரையில் விழுந்து கும்பிட்டார். இதற்காக ஒசூர் முழுவதும் 2000 போலிசார் குவிக்கப்பட்டிருந்தனர். தொடர்ந்து அவர் சென்னை நோக்கி பயணித்து வருகிறார்.  

4 ஆண்டு சிறைவாசத்திற்கு பிறகு தமிழகம் திரும்பிய சசிகலாவிற்கு சாலை நெடிகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. ஒசூர் முழுவதும் 2000 போலிசார் குவிக்கப்பட்டிருந்தனர். 

சொத்து குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை பெற்று 4 ஆண்டுகளாக பெங்களூரு பரப்பன அக்ரகார சிறையில் சசிகலா தண்டனை அனுபவித்து வந்தார்.ஜனவரி 27 அன்று விடுதலையான சசிகலா, கொரோனா தொற்று காரணமாக பெங்களூருவில் உள்ள விடுதியில் தனிமைப்படுத்தி கொண்டிருந்தார். சசிகலா உறவினரான இளவரசியும் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று பெங்களூரிலிருந்து அதிமுக கொடியுடன் தமிழகம் வந்தார். 

சசிகலா வந்த காரில் இருந்த அதிமுக கொடி போலீசாரால்  அகற்றப்பட்டது,  இதனை யடுத்து, அதிமுக கொடியுடன் கூடிய வேறொரு காரில் சசிகலா பயணிக்கிறார்.  இதனால் சசிகலா மீது காவல்துறையினரால் நடவடிக்கை எடுக்க முடியாமல் போயிற்று, சசிகலா காரில் அதிமுக கொடியை அகற்றபடவில்லை, அதற்காக கிருஷ்ணகிரி போலீசார் நோட்டீஸ் வழங்கினர், அதை அவரது வழக்கறிஞர் செந்தூர்பாண்டியன் பெற்றுக் கொண்டார். 

ஓசூரின் பல்வேறு பகுதிகளில் சசிகலாவை வரவேற்பதற்கான ஏற்பாடுகள் இரண்டு நாட்களாக நடைப்பெற்று வந்தது. தமிழக - கர்நாடக மாநில எல்லையான ஜூஜூவாடியில் அமமுகவினர் சார்பில் கொடி, தோரணங்கள், பதாகைகள், மேள தாளங்களுடன் தயாராக இருந்த நிலையில் அவருக்கு அவரது தொண்டர்கள் உற்சாக வரவேற்பு வழங்கினர். 

ஒசூர் மாநகரின் 4 இடங்களில் அமமுக சார்பில் வரவேற்பு வழங்கப்பட்டது, தர்கா பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் நேரடியாக வழிபட்ட சசிகலா தரையில் விழுந்து கும்பிட்டார். இதற்காக ஒசூர் முழுவதும் 2000 போலிசார் குவிக்கப்பட்டிருந்தனர். தொடர்ந்து அவர் சென்னை நோக்கி பயணித்து வருகிறார்.  

click me!