குடும்ப சண்டையால் ஆட்சி அதிகாரத்தை கோட்டைவிடக் கூடாது : ஓரணியில் திரண்ட உறவுகள்!

Asianet News Tamil  
Published : Mar 31, 2017, 10:10 AM ISTUpdated : Sep 19, 2018, 03:05 AM IST
குடும்ப சண்டையால் ஆட்சி அதிகாரத்தை கோட்டைவிடக் கூடாது : ஓரணியில் திரண்ட உறவுகள்!

சுருக்கம்

sasikala family join together to the winning for rk nagar election

அதிகார போட்டியால் சிதறி கிடந்த மன்னார்குடி உறவுகள், ஆட்சி அதிகாரம் கையை விட்டு போய்விடும் அச்சத்தில், பகையை மறந்து  மீண்டும் ஓரணியில் திரண்டு நிற்கிறது.

தினகரன் மீது கடும் கோபத்தில் இருந்த திவாகரன் உள்ளிட்ட அனைத்து குடும்ப உறவுகளிடமும், பக்குவமாக பேசி ஓரணியில் திரள வைத்தவர்கள் இளவரசி மகன் விவேக்கும், திவாகரன் மகன் ஜெய் ஆனந்தம்தான் என்கின்றனர்.

ஆர்.கே.நகரில் தினகரனை தோற்கடிக்க திமுக தரப்பிலும், பன்னீர் தரப்பிலும் கடுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எனவே, தினகரன் வெற்றி பெற்றால் மட்டுமே, ஆட்சி அதிகாரத்தை நமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும். தவறினால், மீண்டும் இந்த சந்தர்ப்பம் இனி எப்போதும்  கிடைக்காது என்று அவர்கள் கூறி உள்ளனர்.

சிறிய வயது பிள்ளைகள் சிந்திக்கும் அளவுக்கு கூட சிந்திக்காமல், நாம் ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு இருக்கிறோமே என்று, அவர்கள் தங்களுக்குள் வருத்தப்பட்டு கொண்டார்களாம்.

அதை அடுத்து, அனைவரும் ஒன்றாக இணைந்து, எப்படியாவது தினகரனை வெற்றிபெற செய்ய வேண்டும் என்று அவர்களுக்குள் உறுதிமொழி எடுத்துக் கொண்டுள்ளனர்.

இதை கேட்டு பூரித்து போன தினகரன், கட்சியின் முக்கிய பொறுப்பு ஒன்றை திவாகரனுக்கு வழங்க முன் வந்திருக்கிறார்.

ஆனாலும், தேர்தல் முடியும் வரை நம் உறவுகள் யாருக்கும், எந்த பொறுப்பும் வழங்கக் கூடாது என்று சசிகலா திட்டவட்டமாகக் கூறி விட்டாராம்.

மேலும், ஆர்.கே.நகர் தேர்தல் வெற்றியில் மட்டுமே அனைவரது கவனமும் இருக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

5.5 லட்சம் கோடி கடன்.. தமிழக மக்களை கடனாளியாக்கிய முதல்வர் ஸ்டாலின்.. இபிஎஸ் விமர்சனம்!
‘4-ல் 1கூட இல்லை.. ஸ்டாலின் சொல்லும் அத்தனையும் பச்சைப் பொய்..! எடப்பாடி பழனிசாமி சீற்றம்..!