சசிகலா, டி.டி.வி., வெங்கடேஷ் அதிமுகவில் இருந்து நீக்கம் – மதுசூதனன் அதிரடி.

Asianet News Tamil  
Published : Feb 17, 2017, 12:23 PM ISTUpdated : Sep 19, 2018, 01:06 AM IST
சசிகலா, டி.டி.வி., வெங்கடேஷ் அதிமுகவில் இருந்து நீக்கம் – மதுசூதனன் அதிரடி.

சுருக்கம்

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவின் பொது செயலாளராக சசிகரலா தேர்ந்தெடுக்கப்பட்டார். சசிகலா சிறைக்கு செல்லும் முன், டி.டி.வி.தினகரன் துணை பொது செயலாகராக ஆக்கப்பட்டார்.

இந்த நிலையில், அதிமுகவின் அவை தலைவராக இருந்த இ.மதுசூதனன், அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அவருடைய அறிவிப்பில், அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக, சட்டதிட்ட விதிகளின் படி, முக்கிய அறிவிப்பு என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதய தெய்வம் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மாவிடம் அளித்த வாக்குறுதிகளை மீறி மாண்புமிகு அம்மா அவர்களுக்கு துரோகம் செய்த, அவரது விருப்பத்துக்கு மாறாக நடந்து கொண்டதால் கட்சியில் இருந்து பல ஆண்டுகாலமாக நீக்கி ஒதுக்கி வைக்ப்பட்டு இருந்த டி.டி.வி.தினகரன், டாக்டர் வெங்கடேஷ் ஆகியோரை கட்சியில் இருந்து நீக்குவதாகவும், அவர்களுக்கு கொடுக்கப்பட்ட அதிகாரம் பறிக்கப்படுகிறது எனவும் மதுசூதனன் அறிவித்துள்ளார்.

மேலும், ஏற்கனவே கட்சியில் இருந்து சசிகலா நீக்கம் குறித்தும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பன்னீர்செல்வம் அணியின் இந்த நடவடிக்கை சசிகலா தரப்பினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

அதிலும் குறிப்பாக ஜெயலலிதா கொடுக்கும் அறிக்கையை போலவே, கட்சியில் இருந்து நீக்கப்பட்ட 3 பேரிடமும் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் எந்த தொடர்பும் வைத்து கொள்ள கூடாது என்றும் அறிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

Govt Scheme: இனி நீங்க சொந்த வீட்டுல இருக்க போறீங்க.! வீடு கட்ட அள்ளிக்கொடுக்கும் விஜய்.! உடனே இடத்த ரெடி பண்ணுங்க.!
India Independence: இந்திய சுதந்திரம் உலக விடுதலைக்கு வித்திட்ட கதை! இதன் பிறகு எத்தனை நாடுகள் சுதந்திரம் பெற்றன தெரியுமா?