"ஆடு பகை... குட்டி உறவு" - டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவளிக்கும் கருப்பசாமி பாண்டியன் மகன்

 
Published : Feb 17, 2017, 12:14 PM ISTUpdated : Sep 19, 2018, 01:06 AM IST
"ஆடு பகை... குட்டி உறவு" - டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவளிக்கும் கருப்பசாமி பாண்டியன் மகன்

சுருக்கம்

அதிமுக துணை பொதுசெயாளராக டி.டி.வி தினகரன் நியமிக்கப்பட்ட உடனே அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியவர் நெல்லை மாவட்ட அதிமுக பிரமுகர் கருப்பசாமி பாண்டியன்

ஒரு வருடதிற்கு முன்பு ஜெயலலிதா முன்பாக திமுவிலிருந்து மீண்டும் அதிமுகவில் இணைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக திமுகவில் மாவட்ட செயலாளராக இருந்தவர் கருப்பசாமி ஆவார்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பொது செயலாளராக பதவியேற்கும் முன் அதிருப்தியாளர்களை கண்டறிந்து சரிகட்டினர் சசிகலா.

தீபாவுக்கு ஆதரவளித்த சைதை துரைசாமி, முதல் கே.பி. முனுசாமியுடன் இருந்த கோ.சமரசம், தினகரனுக்கு எதிராக பேசி வந்த கருப்பு பாண்டியன் உள்ளிட்ட 13 பேரை அதிமுகவின் உயரிய பொறுப்பான அமைப்பு செயலாளர் பதவி கொடுத்து தன் பக்கம் கொண்டு வந்தார்.

இந்த காட்சிகள் முடிந்து சசிகலாவுக்கு சிறை என்ற படலம் வந்தவுடன் காட்சிகள் மாறியது.

டிடிவி தினகரன் துணை பொது செயலாளராகவும் ஆக்கபட்டார்.

டிடிவியால் கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்டு பல துன்பங்களை அடைந்து திமுகவுக்கு சென்றவர் கருப்பசாமி பாண்டியன்.

தற்போது மீண்டும் அவர் தலைமையின் கீழ் வேலை செய்யவேண்டும் என்பதை எண்ணி மனம் நொந்து போனார் கருப்பசாமி.

அதனால் அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கி பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி அமைப்பு செயலாளர் பதவியிலிருந்து ராஜினமா செய்வதாக அறிவித்தார்.

இப்படி கருப்பசாமி பாண்டியன் டிடிவி தினகரனை எதிர்த்த 2 மணி நேரத்துக்குள்ளாகவே அவரது மகன் வி.கே.பி ஷங்கர் தினகரனுக்கு ஆதரவாக கையை உயர்த்தியுள்ளார்.

அப்பா தினகரனை எதிர்த்தாலும் மகன் தினகரனுக்கு ஆதரவாக திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் வேலை செய்யபோவதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.

தந்தை - மகன். அண்ணன் -தம்பி, அம்மா-மகன் மாமன்- மச்சான், கணவன் - மனைவி என இது போன்ற எத்தனையோ உறவுகள் அதிமுக எனும் கட்சியால் பல பிரபலமான் குடும்பங்களில் சீர்குலைந்து போனது கடந்த கால நிகழ்வுகளாகும்.

தாமரைக்கனி - இன்பத்தமிழன், சுலோச்சனா சம்பத் - ஈவிகேஸ் இளங்கோவன், எம்.சி சம்பத் - எம்.சி தாமோதரன், இது போன்ற ஏராளமனோர் வரிசையில் தற்போது கருப்புசாமி பாண்டியன் குடும்பமும் இணைந்துள்ளது.

அரசியலுக்காக குடும்ப உறவுகளை இழந்தவர்கள் தமிழகத்தில்தான் இருப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

PREV
click me!

Recommended Stories

நான் காமராஜரை பற்றி பேசியதை வதந்தி பரப்புகிறார்கள்..! மன்னிப்புக்கேட்ட முக்தார்..!
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு