"எடப்பாடிக்கு எதிராக வாக்களிப்பேன்... பதவி போனாலும் பரவாயில்லை" - நடராஜ் அதிரடி

First Published Feb 17, 2017, 11:40 AM IST
Highlights


124 எம்எல்ஏக்கள் தங்கள் பக்கம் இருக்கிறார்கள் என இனி சசிகலா தரப்பு மார்தட்டி கொள்ள முடியாது.

மதில் மேல் பூனையாக இருந்த ஐபிஎஸ் எம்எல்ஏவான நடராஜா அதிரடியாக தனது முடிவை அறிவித்து விட்டார்.

ஓபிஎஸ் தரப்பு சென்று சந்தித்த போதும் சசிகலா தரப்பு சென்று சந்தித்த போதும் பிடி கொடுக்காமல் பேசி வந்தார் நடராஜ்.

இந்த நிலையில் கவர்னரால் ஓபிஎஸ் பதவி இறக்கப்பட்டு  எடப்பாடி முதல்வராக்க பட்டார்.

எடப்பாடி முதல்வர் ஆன உடனே பரபரப்பு தொற்றி கொண்டது.

18ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பும் கோரப்பட்டது.

ஒவ்வொரு எம்எல்ஏக்களின் எண்ணிக்கையும் தற்போதைய சூழலில் மிகவும் முக்கியமானது என்பதால் சேதாரம் இல்லாமல் இருப்பதற்கான வேலைகளை சசிகலா தரப்பு செய்து வந்தது.

ஓபிஎஸ் தரப்பில் பாத்து எம்எல்ஏக்கள் தவிர்த்து மேலும் 7 எம்எல்ஏக்கள் மாற்றி போட்டாலே ஆட்சி காலியாகிவிடும்.

இந்நிலையில்தான் மைலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் நடராஜ் எடப்பாடிக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார்.

கட்சி தாவல் தடை சட்டத்தால் தனது எம்எல்ஏ பதவி போனாலும் பரவாயில்லை.

நாளை எடப்பாடிக்கு எதிராகவே வாக்களிப்பேன் என பகிரங்கமாகவே தெரிவித்தார் எம்எல்ஏ நடராஜ்.

இதனால் சசிகலா தரப்புக்கு ஆதரவு அளிக்கும் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 123ஆக குறைந்துள்ளது.

இந்த 123 எம்எல்ஏக்களும் சிந்தாமல் சிதறாமல் வாக்களித்தால் மட்டுமே நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி அரசு தப்பிக்கும்.

click me!