தாய் இறப்புக்கு கூட வராத எம்எல்ஏ - பதவி படுத்தும் பாடு

 
Published : Feb 17, 2017, 11:15 AM ISTUpdated : Sep 19, 2018, 01:06 AM IST
தாய் இறப்புக்கு கூட வராத எம்எல்ஏ - பதவி படுத்தும் பாடு

சுருக்கம்

திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் அதிமுகவை சேர்ந்த கே.என்.விஜயகுமார். இவரது தந்தை கருப்புசாமி. இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவியின் மகன்தான் எம்எல்ஏ விஜயகுமார்.

எம்எல்ஏ விஜயகுமார் சிறுவனாக இருந்தபோது, அவரது தாய் இறந்துவிட்டார். இதனால், கருப்புசாமி, அங்காத்தாள் (80) என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகள் உள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கருப்பு சாமியும் இறந்துவிட்டார்.

இதையடுத்து அங்காத்தாள், திருப்பூர் அருகே உள்ள வெங்கமேடு பகுதியில் உள்ள அவர்களது பூர்வீக வீட்டில் வசித்து வந்தார்.

இதற்கிடையில், அதிமுகவில் சசிகலா மற்றும் ஓ.பன்னீர்செல்வம் என இரு அணிகளாக பிரிந்தனர். இதனால், அக்கட்சியில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதில், முதலமைச்சராக பதவியேற்க எம்எல்ஏக்கள் ஆதரவை திரட்டி வருகின்றனர்.

இதையொட்டி, சசிகலா ஆதரவு எம்எல்ஏக்கள், சென்னை புறநகர் பகுதியான கிழக்கு கடற்கரை சாலை கூவத்தூர் பகுதியில் உள்ள ரிசார்ட்டில் தங்கியுள்ளனர். அந்த ரிசார்ட்டில், கடந்த ஒரு வாரமாக எம்எல்ஏ விஜயகுமாரும் தங்கியுள்ளார்.

இந்நிலையில் திருப்பூரில் தனியாக வசித்து வந்த அங்காத்தாள், உடல்நலக்குறைவால் இறந்தார். உடனே உறவினர்கள், விஜயகுமாருக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்தனர். அவர் புறப்பட்டாரா இல்லையா என அறிந்து கொள்வதற்காக மீண்டும் தொடர்பு கொண்டபோது, செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால், அதிர்ச்சியடைந்தனர்.

வளர்த்த தாய் இறந்த செய்தியை கூறிய பிறகு செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருப்பதை கண்டு, உறவினர்கள் வேதனை அடைந்தனர். பின்னர், சந்தர்ப்ப சூழ்நிலை எப்படி இருக்கிறதோ என இருந்த அவர்கள், இரவுக்குள் விஜயகுமார் வந்துவிடுவார் என காத்திருந்தனர். அதில் ஏமாற்றமே மிஞ்சியது.

இதையடுத்து நேற்று மாலை அங்காத்தாள் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதில், எம்எல்ஏ விஜயகுமாரின் சகோதரர்கள் இறுதி சடங்குகளை செய்து முடித்தனர்.

வளர்த்த தாயின் இறுதி சடங்கில் எம்எல்ஏ விஜயகுமார் கலந்து கொள்ளாதது, அவரது உறவினர்கள் மட்டுமின்றி தொகுதி மக்களையும் அதிருப்தியும், வேதனையும் அடைய செய்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

நான் காமராஜரை பற்றி பேசியதை வதந்தி பரப்புகிறார்கள்..! மன்னிப்புக்கேட்ட முக்தார்..!
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு