தூக்கமில்லாமல் தவித்த சசிகலா - முதல் நாள் இரவு

 
Published : Feb 17, 2017, 10:40 AM ISTUpdated : Sep 19, 2018, 01:06 AM IST
தூக்கமில்லாமல் தவித்த சசிகலா - முதல் நாள் இரவு

சுருக்கம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா உள்பட 4 பேர் மீதான சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு கடந்த 14ம் தேதி வழங்கப்பட்டது. இதில் ஜெயலலிதா மரணமடைந்துவிட்டதால், அவருக்கு அபராதம் ரூ.100 கோடி, சசிகலா உள்ளிட்ட 3பேருக்கு தலா 4 ஆண்டு சிறை, ரூ.10 கோடி அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதையடுத்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் நேற்று முன்தினம் மாலை, பெங்களூர் பார்ப்பன அக்ரஹார சிறைச்சாலையில் சரணடைந்தனர். அங்கு சசிகலா, இளவரசி ஆகியோர் பெண்கள் சிறையில் உள்ள 48வது அறையில் தங்க வைக்கப்பட்டனர்.

சிறையில் தங்க வைக்கப்பட்டுள்ள சசிகலா குறித்து, சிறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது:-

ஒரே அறையில் தங்கியுள்ள 2 பேருக்கும், சிறைச்சாலை சார்பில் கைதிகளுக்கான உடை (வெள்ளை நிற கதர் சேலை) வழங்கப்பட்டது. அதை வாங்கி கொண்ட சசிகலா, மறுநாள் அணிந்து கொள்வதாக கூறினார். இளவரசி, அப்போதே உடையை அணிந்து கொண்டார்.

இரவு இருவருக்கும் உணவு வழங்கப்பட்டது. ஆனால், சசிகலா அதை சாப்பிடவில்லை. இளவரசி அவரிடம், எவ்வளவு வற்புறுத்தியும் பிடிவாதமாக இருந்தார். நீண்ட நேரத்துக்கு பின்னர், பழங்கள் மட்டும் சாப்பிட்டார். இரவு முழுவதும் தூங்காமல் விழித்து கொண்டு இருந்தார். சசிகலா, இளவரசி ஆகியோர் நள்ளிரவு வரை பேசி கொண்டு இருந்தனர்.

நேற்று காலை எழுந்ததும் அவருக்கு கருப்படி கொடுக்கப்பட்டது. அதை குடிக்க மறுத்த அவர், நடைபயிற்சி மேற்கொண்டார். அவருடன் பெண் காவலர்கள் சிலர், சென்றனர். அப்போது, அவர்களுடன் சாதாரணமாக பேசி கொண்டு நடந்தார்.

பின்னர் சிறை அறைக்கு வந்த சசிகலா, பத்திரிகைகள் வேண்டும் என கேட்டு கொண்டார். அதன்படி அவருக்கு தமிழ் மற்றும் ஆங்கில பத்திரிகைகள் கொடுத்தனர். அதை ஒவ்வொரு பக்கமாக பிரித்து பொறுமையுடன் படித்தார்.

சிறிது நேரம் கழித்து அவருக்கு, சாதாரண கைதிகளுக்கு வழங்கப்படும் டிபன் கொண்டுவரப்பட்டது. அதையும் அவர், சாப்பிட மறுத்தார். மீண்டும் இளவரசி, அவரிடம் உடல்நிலையை குறித்து வலியுறுத்திதால், அந்த டிபனை சாப்பிட்டார். மதியம் சாப்பாடு, சப்பாத்தி சாப்பிட்டதாக கூறப்படுகிறது.

சிறையில் உள்ள 3 பேருக்கும், சாதாரண கைதிகளுக்கு வழங்கப்படும் உணவுகளே வழங்கப்படுகிறது. நேற்று முழுவதும் சசிகலா, யாருடனும் பேசாமல் சோகமாகவே இருந்துள்ளார். யாருடனும் அவர், சரிவர பேசவில்லை. வக்கீல்கள் சிலர், வந்து பேசி சென்றனர்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

PREV
click me!

Recommended Stories

நான் காமராஜரை பற்றி பேசியதை வதந்தி பரப்புகிறார்கள்..! மன்னிப்புக்கேட்ட முக்தார்..!
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு