இன்று மாலை திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்..!!

 
Published : Feb 17, 2017, 09:42 AM ISTUpdated : Sep 19, 2018, 01:06 AM IST
இன்று மாலை திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்..!!

சுருக்கம்

கடந்த டிசம்பர் 5ம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலமானார். இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராகவும், சசிகலா அதிமுக பொது செயலாளராகவும் பொறுப்பேற்று கொண்டனர்.

பின்னர், கடந்த 5ம் தேதி ஓ.பி.எஸ். தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும், சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். இதனால், அதிமுக இரு அணியாக பிரிந்தது. இதையடுத்து சசிகலா முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு பதவி பிரமாணம் செய்யும்படி கவர்னருக்கு வலியுறுத்தப்பட்டது.

இதற்கிடையில், கடந்த 14ம் தேதி சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு, 4 ஆண்டு சிறை தண்டனை வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர், பெங்களூர் பார்ப்பன அக்ரஹார சிறைச்சாலையில் சரணடைந்தார்.

பின்னர், எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சராக தேர்வு செய்யப்ப்பட்டார். அவருக்கு நேற்று மாலை பதவி பிரமாணம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து நாளை, சட்டமன்ற உறுப்பினர்களின் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.

இதையொட்டி, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை 4 மணிக்கு திமுக எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில், தமிழக சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பின்போது செயல்பட வேண்டிய நிலை மற்றும் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தின்மீது எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து திமுக தலைமை இன்று திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் மாலை 4 மணிக்கு ஆலோசனை நடத்தப்படுகிறது

PREV
click me!

Recommended Stories

தேர்தல் செலவுக்கு மண் திருடும் மாஃபியாக்கள்..! ஸ்வீட்பாக்ஸில் கொழிக்கும் அதிகாரிகள்..!
TVK தான் பெஸ்ட் சாய்ஸ்.. கூட்டாக விஜய் பக்கம் சாய்ந்த பன்னீர்செல்வம் மா.செ.கள்