"கல்லறைக்கே இந்த அடின்னா... அப்ப உயிரோடு இருக்கும்போது...?" - இளங்கோவன் பகீர்

 
Published : Feb 17, 2017, 09:06 AM ISTUpdated : Sep 19, 2018, 01:06 AM IST
"கல்லறைக்கே இந்த அடின்னா... அப்ப உயிரோடு இருக்கும்போது...?" - இளங்கோவன் பகீர்

சுருக்கம்

கல்லறைக்குள் இருக்கும் போதே இப்படி அடி விழுந்தால் உயிரோடு இருக்கும்போது எப்படி அடி வாங்கியிருப்பார் என  மக்கள் சிந்திக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தமிழக தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் சிறை செல்வதற்கு முன் சென்னையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது கல்லறையில் மூன்று முறை ஓங்கி அடித்து சபதம் செய்தார்,

சசிகலா என்ன நினைத்து சபதம் செய்தார் என யாருக்கும் தெரியாத நிலையில் நெட்டிசன்கள் அந்த காட்சியை சமூக வலைதளங்களில் பதிவிட்டு கலாய்த்து வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், தவறு செய்தவர்கள், மக்களை ஏமாற்றியவர்கள் சிறை சென்றே ஆகவேண்டும் என்றும், அவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது என்றும் தெரிவித்தார்.

எல்லாவற்றுக்கும் ஓர் அளவு உள்ளது என்றும்,பேராசைப்பட்டால், சிறைக்குத்தான் போக வேண்டும் என்றும் இளங்கோவன் தெரிவித்தார்.

கல்லறைக்குள் இருக்கும்போதே இப்படி அடி விழுந்தால்இ அவர் உயிரோடு இருக்கும்போது எப்படி அடி வாங்கியிருப்பார் என நினைத்துப் பார்க்க வேண்டும் என்றார்.

நாட்டை குட்டிச் சுவராக்கினால் போதும் என நினைத்தால் சிறையில் போய் தான் நிம்மதியாக இருக்க முடியும் எனவும் ஈவிகேஎஸ் இளங்கோவன் சாட்டையடி கொடுத்தார்.

PREV
click me!

Recommended Stories

நான் காமராஜரை பற்றி பேசியதை வதந்தி பரப்புகிறார்கள்..! மன்னிப்புக்கேட்ட முக்தார்..!
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு