
வீட்டை உடனடியாக காலி பண்ணுங்க …ஓபிஎஸ்ஸை விரட்டும் எடப்பாடி பழனிசாமி..
தமிழகத்தின் புதிய முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்றுக் கொண்ட சிறிது நேரத்தில் ஓபிஎஸ் தற்போது தங்கியிருக்கும் அரசு பங்களாவை உடனே காலி செய்ய வேண்டும் என்று நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது.
முதலமைச்சராக இருந்த ஓபிஎஸ் பதவியை ராஜினாமா செய்த பின்னர் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அரசு பங்களாவில் வசித்து வருகிறார். 5 ஆண்டுகளுக்கு மேலாக ஓபிஎஸ் அந்த அரசு பங்களாவில் இருந்து வருகிறார்.
அவர் முதலமைச்சராக இருந்த போதும் நிதித்துறை அமைச்சர் என்ற பெயர் பலகையையே வீட்டின் முகப்பில் வைத்திருந்தார். அந்த அளவுக்கு ஜெயலலிதாவுக்கு மரியாதை அளித்து பணிவுடன் நடந்து வருகிறார். இந்த பங்களாவில் இருந்தபடியே, சசிகலாவுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் தமிழகத்தின் புதிய முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்றுக் கொண்டார்.இதனால் முதலமைச்சராக இருந்த ஓபிஎஸ் பதவி இழந்தார்.
இதனிடையே எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்ற சிறிது நேரத்தில், பொதுப்பணித்துறை மூலம், ஓபிஎஸ்க்கு திடீர் நெருக்கடி தரப்பட்டுள்ளது.
ஓபிஎஸ் தற்போது, எம்எல்ஏவாக மட்டுமே உள்ளதால் தற்போது அவர் குடியிருக்கும், அரசு பங்களாவை எடனடியாக காலி செய்ய வேண்டும் என்று
பொதுப் பணித்துறை செயலர் அலுவலகத்தில் இருந்து, நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ஓபிஎஸ் உடனடியாக காலி செய்யவில்லை என்றால் மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு, கழிவுநீர் குழாய் இணைப்புகளை துண்டிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஓபிஎஸ்க்கு ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள எம்எல்ஏக்கள் விடுதியில், அறை ஒதுக்கப்படும் என தெரிகிறது.