
தினகரன் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதிமுகவை கைப்பற்ற முடியாது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக கூறியுள்ளார்.
கிருஷ்ணகிரியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். அப்போது, அவர் பேசுகையில்;- அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டவர்கள் கட்சிக்கு எதிராக சதித்திட்டம் தீட்டி வருகிறார்கள். ஒருபோதும் அவர்களை அதிமுகவில் இணைக்க முடியாது. கட்சி ஒருபோதும் அவர்களுக்கு தலைவணங்காது. சிலர் திட்டமிட்டு அதிமுகவை கைப்பற்ற முயற்சி செய்கின்றனர். அடிமட்ட தொண்டர்தான் இனி அதிமுகவில் முதல்வராக முடியும் என்றார்.
மேலும் அவர் பேசுகையில், திமுக தலைவர் ஸ்டாலின் அவதூறு பரப்பி வருகிறார். பத்தாண்டுகளாக கட்சி உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட தினகரன் இப்போது கட்சியை கைப்பற்ற சூழ்ச்சி வலையை பின்னி கொண்டிருக்கிறார்.
அதிமுக தொண்டர்கள் ஒற்றுமையாக இருந்து அந்த சூழ்ச்சி வலையில் சிக்கக் கூடாது. எம்ஜிஆர், ஜெயலலிதா கண்ட கனவை தொண்டர்கள் ஒற்றுமையாக இருந்து நிறைவேற்ற வேண்டும். தினகரன் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதிமுகவை கைப்பற்ற முடியாது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.