சசிகலாவை சந்திக்க நேரம் கேட்ட அதிமுக கூட்டணி கட்சி தலைவர்... அதிர்ச்சியில் முதல்வர்..!

Published : Feb 10, 2021, 05:09 PM IST
சசிகலாவை சந்திக்க நேரம் கேட்ட அதிமுக கூட்டணி கட்சி தலைவர்... அதிர்ச்சியில் முதல்வர்..!

சுருக்கம்

சசிகலாவைச் சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக முக்குலத்தோர் புலிப்படையின் தலைவரும், எம்.எல்.ஏவுமான கருணாஸ் தகவல் தெரிவித்துள்ளார்.

சசிகலாவைச் சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக முக்குலத்தோர் புலிப்படையின் தலைவரும், எம்.எல்.ஏவுமான கருணாஸ் தகவல் தெரிவித்துள்ளார்.

சொத்துகுவிப்பு வழக்கில் 4 ஆண்டு காலம் சிறைதண்டனை அனுபவித்து வந்த சசிகலா, கடந்த ஜனவரி மாதம் 27-ம் தேதி விடுதலை செய்யப்பட்டார். இருப்பினும், கொரோனா பாதிப்பின் காரணமாக பெங்களூருவிலுள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றதால், மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். பின்னர், மருத்துவர்களின் அறிவுரைப்படி சொகுசு விடுதியில் தங்கி ஓய்வுவெடுத்து வந்தார். நேற்று முன்தினம் பெங்களூருவிலிருந்து புறப்பட்ட அவருக்கு வழிநெடுகிலும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்ததால்  23 மணிநேரத்திற்கு பிறகு சென்னை வந்தடைந்தார். 

இந்நிலையில், அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் தேர்தல் நின்று வெற்றி பெற்று எம்.எல்.ஏவாக இருக்கும் கருணாஸ் ஆரம்பம் முதலே சசிகலாவுக்கு ஆதரவாக பேசிவருகிறார். தனக்கு சீட் ஒதுக்கியது ஜெயலலிதா. ஆனால் அதற்கு காரணமாக இருந்தவர் சசிகலா தான். சசிகலா எந்த பதவியில் இல்லாத போதே அதிமுகவை ஆட்டி படைத்தவர். அவரை அவ்வளவு சாதாரணமாக எடை போடக் கூடாது  Wait And See என்று கூறியிருந்தார். 

இந்நிலையில், சசிகலாவைச் சந்திக்க நேரம் கேட்டுள்ளதாகவும், விரைவில் அவரைச் சந்திக்கவுள்ளதாகவும் கருணாஸ் தெரிவித்துள்ளார். இதற்காக அவர் சென்னை  வந்துகொண்டிருப்பதாகவும், இன்று அல்லது நாளை சசிகலாவை சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. 

PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!