அதிமுகவிற்கு காங்கிரஸ் தலைவரை அனுப்பி வைத்த கார்த்தி சிதம்பரம்... கதர் சட்டைகளுக்குள் களேபரம்..!

Published : Feb 10, 2021, 04:24 PM IST
அதிமுகவிற்கு காங்கிரஸ் தலைவரை அனுப்பி வைத்த கார்த்தி சிதம்பரம்... கதர் சட்டைகளுக்குள் களேபரம்..!

சுருக்கம்

புதுக்கோட்டை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்தவர் தர்மதங்கவேல். சமீபத்தில் முதல்வர் முன்னிலையில், அ.தி.மு.க.,வில் சேர்ந்து விட்டார்.

புதுக்கோட்டை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்தவர் தர்மதங்கவேல். சமீபத்தில் முதல்வர் முன்னிலையில், அ.தி.மு.க.,வில் சேர்ந்து விட்டார்.

சிவகங்கை தொகுதி எம்.பி.,யாக கார்த்தி சிதம்பரம் வெற்றி பெற்றதும் சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியை, தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டார். புதுக்கோட்டை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பதவிக்கு, தன் ஆதரவாளரை நியமிக்க, கார்த்தி சிதம்பரம் நினைத்தார்.

ஆனால், மாநில தலைவர், கே.எஸ்.அழகிரி, தர்ம தங்கவேலுவை மாவட்டத் தலைவராக நியமித்து விட்டார். ஆனாலும், பெயருக்கு தான், தர்ம தங்கவேலு பொறுப்பில் இருந்திருக்கிறார். கார்த்தியின் ஆட்கள், அவரை கறிவேப்பிலை அளவுக்கு கூட மதிக்கவில்லை. இந்த விரக்தியில்தான், அவர் ஆளுங்கட்சிக்கு தாவி விட்டார்'என காங்கிரசார் புலம்புகிறார்கள். காங்கிரசுக்கு எதிரிகள் வெளியில் இருந்து வரவேண்டாம். அவர்களே போதும் என சிவகங்கை மாவட்ட அரசியல் பிரமுகர்கள் புலம்புகிறார்கள். 

PREV
click me!

Recommended Stories

தமிழக எம்.பி.களுக்கு செம டோஸ் விட்ட ராகுல் காந்தி..? டெல்லியில் நடந்தது என்ன..? செல்வப்பெருந்தகை ஓபன் டாக்
விஜய் மட்டுமே முழு காரணம்.. கரூரை மீண்டும் கையிலெடுத்த திமுக.. கடுமையான விமர்சனம்!