AIADMK: கட்சி கொடி, பெயரையும் பயன்படுத்துவதால் சசிகலா தலைவராக முடியாது.. சட்டரீதியான நடவடிக்கை.. ஜெயக்குமார்.!

By vinoth kumarFirst Published Dec 3, 2021, 6:56 AM IST
Highlights

அன்வர் ராஜாவின் நீக்கம் கட்சிக்குள் ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது. மிகப்பெரிய எழுச்சியும் புத்துணர்ச்சியும் தற்போது அதிமுகவில் உள்ளது.  உண்மையான அதிமுகவின் ரத்தம் ஓடும் எந்த ஒரு நபரும் அதிமுகவை விட்டு விலகிச் செல்ல மாட்டார்கள்

அதிமுக கூட்டணி அதே நிலையில் நீடிப்பதாகவும், யார் வந்தாலும் அரவணைத்துக்கொண்டு செல்வோம் என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சேலத்தில் நடைபெற்ற மாநிலங்களவை அதிமுக உறுப்பினர் தம்பிதுரையின் இல்லத்திருமண விழாவில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு மணக்களை வாழ்த்தினார். இதனையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர்;- அதிமுகவை பொறுத்தவரை பொதுச்செயலாளர் என்றால் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தான். இதை தான் பொது குழுவும் ஏற்றுக்கொண்டுள்ளது. பொதுக்குழு அங்கீகாரம் செய்த ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் தான் தற்போது அதிமுகவில் வழி நடத்தி வருகின்றனர்.  5 ஆண்டுகளுக்கு ஒருமுறை பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த வேண்டும் என்றும், அதற்காக தான் கிளைக்கழக தேர்தல் நடப்பதாகவும் தெரிவித்தார்.

சசிகலா  மீது சட்ட ரீதியான நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது  அதிமுக பொதுக்குழுவில் எடுக்கும் முடிவே அதிகாரபூர்வமாக உள்ளது. யாரோ சிலர் கட்சி கொடியை பயன்படுத்துகிறார்கள் , பொதுச்செயலாளர்கள் பெயரை பயன்படுத்துகிறார்கள் என்பதால் அவர்கள் தலைவராக முடியாது. கட்சிக்கொடி பயன்படுத்துவதால் அவர்கள் சட்டரீதியாக விஷயம் அதற்கான பணிகளை அதிமுக  செய்து வருகிறது. சசிகலா குறித்து மீடியாக்கள் மட்டுமே பெரிதாக எழுதியும் செய்திகள் ஒளிபரப்பியும் வருகிறீர்கள்.

அன்வர் ராஜாவின் நீக்கம் கட்சிக்குள் ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது. மிகப்பெரிய எழுச்சியும் புத்துணர்ச்சியும் தற்போது அதிமுகவில் உள்ளது.  உண்மையான அதிமுகவின் ரத்தம் ஓடும் எந்த ஒரு நபரும் அதிமுகவை விட்டு விலகிச் செல்ல மாட்டார்கள் என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

click me!