’அம்மா’ கொடுத்த சிபாரிசு கடிதம்.. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பற்றி ஜெயானந்த் வெளியிட்ட ‘நெகிழ்ச்சி’ பதிவு !

By Raghupati RFirst Published Dec 5, 2021, 12:47 PM IST
Highlights

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 5ஆம் ஆண்டு நினைவு நாளில் சசிகலா சகோதரர் திவாகரன் மகன், ஜெயானந்த் வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

சசிகலாவின் இளைய சகோதரர் திவாகரனின் மகன் ஜெயானந்த் திருமணம் கடந்த ஆண்டு மார்ச் 5ம் தேதி மன்னார்குடியில் கோலாகலமாக நடைபெற்றது. சசிகலாவின் உறவினர் வி பாஸ்கரனின் மகள் ஜெயஸ்ரீயை மணமுடித்தார் ஜெயானந்த். ஜெயானந்த் திருமணத்திற்கு சசிகலா சார்பில் யாரும் செல்லவில்லை. அப்போது சிறையில் இருந்த இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா, அவரது தம்பியும், ஜெயா டிவியின் தலைமை செயல் அதிகாரியான விவேக் ஜெயராமன் உள்ளிட்ட நெருங்கிய குடும்பத்தினர் ஜெயானந்த் திருமணத்திற்கு செல்லவில்லை. டிடிவி தினகரனும், ஜெயானந்த் திருமணத்திற்கு செல்லவில்லை. 

ஆனால், அவர் செல்லாமல் இருப்பதற்கு காரணம் வேறு என்று அப்போது தெரிவிக்கப்பட்டது. ‘அண்ணா திராவிடர் கழகம்’ என்ற பெயரில் தனிக்கட்சியை தொடங்கிய திவாகரன், அதற்கான கொடியையும் அறிமுகப்படுத்தினார். இதனால், திவாகரனுக்கும் சசிகலா குடும்பத்திற்குமான பிணக்கம் அதிகரித்ததன் காரணமாக, ஜெயானந்த் திருமணத்தையே அவர்கள் புறக்கணிக்கும் சூழல் உருவானது. அதுமட்டுமல்லாமல் ஜெயானந்த் ‘போஸ் மக்கள் இயக்கம்’ என்ற இயக்கத்தை தொடங்கினார். தினகரன் தனிக்கட்சி தொடங்கும்போது அதன் துணை அமைப்புகளில் ஒன்றாக இது இணைக்கப்படும் என்றும் கூறப்பட்டது. இது நாளடைவில் என்ன ஆனது என்று தெரியவில்லை. 

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய வட்டத்திற்குள் சசிகலாவின் உறவினர்கள் பலரும் இருந்தனர்.இது அனைவருக்கும் தெரிந்த விஷயம் ஆகும். இந்நிலையில் இன்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 5 ஆம் ஆண்டு நினைவு நாள்.இதனையொட்டி சசிகலாவின் சகோதரர் ஆன திவாகரன் மகன் ஜெயானந்த், பேஸ்புக்கில் இன்று ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார்.அதில், ‘என் மனைவி ஜெயஶ்ரீயை சர்ச் பார்க் பள்ளியில் சேர்க்க வேண்டும் என ஜெயலலிதா அம்மா எழுதிய கடிதம் இது ஆகும். இதுபோல் பழைய நினைவுகள் சம்பந்தப்பட்ட விஷியங்களை பாதுகாத்து  வருகிறார் என் மனைவி ஜெயஶ்ரீ. அதில் ஒருகடிதம் இது’ என்று பதிவிட்டு இருக்கிறார். இந்த பதிவு நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 

இதுபற்றிய ஒரு  சின்ன பிளாஷ்பேக் இருக்கிறது. அதிமுக முன்னாள் பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதாவின் வாழ்க்கையை பற்றி கூறும்போது, , சர்ச் பார்க் பள்ளியை பிரிக்கவே முடியாது. கர்நாடகா மாநிலம் மேல்கோட்டை ஊரில் வாழ்ந்த ஜெயராம் - வேதவல்லி பெற்றோருக்கு மகளாக ஜெயலலிதா பிறந்தார். ஜெயலலிதாவுக்கு இரண்டு வயதான பொழுதே அவர் தந்தை ஜெயராம் மறைந்தார். அதன் பின்னர் திரைப்படத்தில் நடிக்க வந்த அவரது அன்னை வேதவல்லி என்ற தனது பெயரை சந்தியா என மாற்றிக்கொண்டார். 

அவர்கள் பெங்களூரில் வசித்த பொழுது ஜெயலலிதா பிஷப் காட்டன் பெண்கள் உயர்நிலை பள்ளியில் படித்தார். பிறகு சென்னைக்கு வந்த அவர்கள் 1958-ம் ஆண்டு முதல் 1964-ம் ஆண்டு வரை சர்ச் பார்க் ப்ரேசெண்டேஷன் கான்வென்ட்டில் 10-ம் வகுப்பு படித்தார். அதன்பிறகு ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் படிக்க அனுமதி கிடைத்தது. அதே சமயம் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. எனவே தனது படிப்பை கைவிட்டு நடிகையானார்.அதன் பிறகு தமிழகத்தையே ஆண்டார் என்பது நம் அனைவருக்கும்  தெரிந்த செய்தி. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளில், சசிகலாவின் சகோதரர் திவாகரன் மகன் ஜெயானந்த், பேஸ்புக்கில் பகிர்ந்த இந்த பதிவு அதிமுகவினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

click me!