சிறை மீண்டும் செல்லாக் காசாகிய சசிகலா... தூள் தூளாகிய அரசியல் கனவு..!

Published : Feb 15, 2021, 03:41 PM IST
சிறை மீண்டும் செல்லாக் காசாகிய சசிகலா... தூள் தூளாகிய அரசியல் கனவு..!

சுருக்கம்

சசிகலா சிறை மீண்டதும் அதிமுக தூள் தூளாகிவிடும், கீழ்மட்ட நிர்வாகிகள் தொடங்கி அமைச்சர்கள் வரை அவரை நோக்கி படையெடுப்பார்கள் என செய்திகள் பரப்பப்பட்டன.

அதிமுகவை ராணுவக் கட்டுப்பாடு கொண்ட கட்சி என பலரும் சொல்வதுண்டு. இந்த நிலையை ஏற்படுத்திய பெருமை ஜெயலலிதாவையே சாரும்.  அவர் மறைந்த பிறகு இதே நிலை நீடிக்குமா என்கிற சந்தேகம் பலருக்கும் ஏற்பட்டது. ஆனால் இந்த சந்தேகங்களையெல்லாம் தவிடுபொடியாக்கி அதிமுகவை அதே ராணுவக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் முதல்வர் பழனிச்சாமி.

சசிகலா சிறை மீண்டதும் அதிமுக தூள் தூளாகிவிடும், கீழ்மட்ட நிர்வாகிகள் தொடங்கி அமைச்சர்கள் வரை அவரை நோக்கி படையெடுப்பார்கள் என செய்திகள் பரப்பப்பட்டன. ஆனால், ஒரு கவுன்சிலர் கூட இதுவரை அந்தப் பக்கம் எட்டிப் பார்க்கவில்லை. இத்தனைக்கும் ஆட்களை அழைத்துவர சசிகலா தரப்பில் ரொம்பவே மெனக்கெட்டார்கள். ’’இரும்புக் கோட்டையாக அதிமுக இப்படி திகழ்வதற்கு முதல்வர் எடப்பாடிதான் முக்கியக் காரணம். சாம தான பேத தண்ட என அத்தனை முறைகளையும் சைலண்டாக பயன்படுத்தி இதை சாதித்துவிட்டார். இதனால் அவரை கமாண்டர் எடப்பாடி என அழைக்கத் தொடங்கி இருக்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். 

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!