பிரச்சாரத்தின் போது திடீரென மயங்கி விழுந்த முதல்வர்.. பரிசோதனையில் கொரோனா உறுதி.. அதிர்ச்சியில் தொண்டர்கள்..!

Published : Feb 15, 2021, 03:38 PM IST
பிரச்சாரத்தின் போது திடீரென மயங்கி விழுந்த முதல்வர்.. பரிசோதனையில் கொரோனா உறுதி.. அதிர்ச்சியில் தொண்டர்கள்..!

சுருக்கம்

பிரச்சாரத்தின் போது விழா மேடையில் மயங்கி விழுந்த குஜராத் முதல்வருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பிரச்சாரத்தின் போது விழா மேடையில் மயங்கி விழுந்த குஜராத் முதல்வருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, நேற்று வதோதராவில் உள்ள நிஜம்புரா பகுதியில் உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, பிரச்சார கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த போது திடீரென யாரும் எதிர்பாராத வகையில் மயங்கி விழுந்தார். அருகிலுள்ள காவலர்கள் அவரை தாங்கி பிடித்தனர். இதையடுத்து மேடையிலேயே அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. 

இதனையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விஜய் ரூபானி தற்போது நலமுடன் இருப்பதாகவும், அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருதாகவும் தகவல் வெளியாகின.

இந்நிலையில், விஜய் ரூபானிக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அந்த பரிசோதனையில் பாசிட்டிவ் என வந்துள்ளது. இதைனயடுத்து, தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. தற்போது, அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

அனிதா மரணத்தை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!
களத்திற்கே வராத விஜய் களத்தை பற்றி பேசலாமா? இடைத்தேர்தல் நடக்கும்போது எங்க போனீங்க..? சீமான் கேள்வி