பகுத்தறிவு பாசறையில் பொங்கும் பக்தி வெள்ளம்... வேல் செய்த மாயம்..!

Published : Feb 15, 2021, 03:31 PM IST
பகுத்தறிவு பாசறையில் பொங்கும் பக்தி வெள்ளம்... வேல் செய்த மாயம்..!

சுருக்கம்

 காலம் முழுவதும் இந்துக்களை அவமதித்து வந்த திமுக தலைமை இப்போது, ‘’நாங்க அப்படியெல்லாம் இல்லீங்கோ’’என பிளேட்டை திருப்பிப் போட்டு வருகிறார்கள்.

எந்த நேரத்தில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் ‘வேல் யாத்திரை’தொடங்கினாரோ அந்த நொடியிலிருந்து வேலுக்கு மிகப்பெரிய மவுசு ஏற்பட்டிருக்கிறது. இதுவரை வேலை, வேண்டாத பொருளாகக் கருதிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அந்தர்பல்டி அடித்து அதைத் தூக்கிப் பிடித்து படம் காட்டினார்.

அவரது மகன் உதயநிதியும் அப்பாவை வழிமொழிய, பகுத்தறிவு பாசறையில் பக்தி வெள்ளம் பொங்கி பிராவகிக்கிறது. இது ஒருபுறமிருக்க, ஸ்டாலின் மனைவி துர்காவோ கோயில் கோயிலாக சென்று சாமி கும்பிட்டு வருகிறார். காலம் முழுவதும் இந்துக்களை அவமதித்து வந்த திமுக தலைமை இப்போது, ‘’நாங்க அப்படியெல்லாம் இல்லீங்கோ’’என பிளேட்டை திருப்பிப் போட்டு வருகிறார்கள். இதை உற்று நோக்கும் நடுநிலையான திமுகவினர், ‘’தேர்தல் நெருங்க, நெருங்க ஸ்டாலின் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் ஆளுக்கொரு திசையில் அறுபடை வீடுகளுக்கு காவடி எடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!’என நையாண்டி செய்கிறார்கள். 
 

PREV
click me!

Recommended Stories

அனிதா மரணத்தை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!
களத்திற்கே வராத விஜய் களத்தை பற்றி பேசலாமா? இடைத்தேர்தல் நடக்கும்போது எங்க போனீங்க..? சீமான் கேள்வி