சசிகலா இன்று காலை டிபன் சாப்பிட்டார்... டீன் மனோஜ் தகவல்..!

Published : Jan 21, 2021, 12:29 PM IST
சசிகலா இன்று காலை டிபன் சாப்பிட்டார்... டீன் மனோஜ் தகவல்..!

சுருக்கம்

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று வரும் சசிகலாவிற்கு திடீரென்று உடல்நல பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சசிகலா இன்று காலையில் உணவருந்தினார் என்றும் டீன் மனோஜ் தெரிவித்துள்ளார்.   

4 ஆண்டு சிறை தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருடன் இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோரும் சிறை தண்டனை பெற்று வருகின்றனர். இந்நிலையில், நேற்று காலை முதல் சசிகலாவிற்கு காய்ச்சல் இருந்துள்ளது.

அவருக்கு சிறையிலேயே மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக பெங்களூரு அரசு மருத்துவமனையான பவுரிங்கில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு முதற்கட்டமாக ஆக்ஸிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது என்று பௌரிங் மருத்துவமனை டீன் தகவல் தெரிவித்துள்ளார். 3 நாட்களுக்கு மருத்துவமனையில் இருப்பார் சசிகலா எனவும், சசிகலா இன்று காலையில் உணவருந்தினார் என்றும் டீன் மனோஜ் தெரிவித்துள்ளார். 

PREV
click me!

Recommended Stories

அரசு பள்ளி சுவர் இடிந்து மாணவன் பலி! ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்த ஸ்டாலின்! பொங்கியெழுந்த இபிஎஸ்!
நாத்திகத்தை கக்கத்தில் போட்டு... ஆத்திகத்தில் கரைந்த திராவிடமாடல் கொள்கை..! ஆண்டாள் வேடமிட்ட திமுக எம்பி., தமிழச்சி..!