இலங்கைக்கு கிழக்கே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி.. தென் தமிழகம், டெல்டா மாவட்டங்களின் லேசான மழைக்கு வாய்ப்பு.

Published : Jan 21, 2021, 12:12 PM IST
இலங்கைக்கு கிழக்கே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி..  தென் தமிழகம், டெல்டா மாவட்டங்களின் லேசான மழைக்கு வாய்ப்பு.

சுருக்கம்

இலங்கைக்கு கிழக்கே நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழகம் மற்றும் டெல்டா  மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். 

இலங்கைக்கு கிழக்கே நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.  ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

 22-1-2021 அன்று தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை  நிலவக் கூடும். 23-1-2021 முதல் 25-1-2021 வரை தமிழகம் புதுவை காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு  மேக மூட்டத்துடனும்,  காலை நேரங்களில் லேசான பனிமூட்டமும் காணப்படும். 

அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியசும், குறைந்த பட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸையும் ஒட்டியிருக்கும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும், காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியசும், குறைந்த பட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸையும் ஒட்டியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

PREV
click me!

Recommended Stories

அரசு பள்ளி சுவர் இடிந்து மாணவன் பலி! ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்த ஸ்டாலின்! பொங்கியெழுந்த இபிஎஸ்!
நாத்திகத்தை கக்கத்தில் போட்டு... ஆத்திகத்தில் கரைந்த திராவிடமாடல் கொள்கை..! ஆண்டாள் வேடமிட்ட திமுக எம்பி., தமிழச்சி..!