எனது சொத்துக்கள் முழுவதையும் ஒப்படைக்கிறேன்... திமுகவுக்கு சவால் விடும் ஓபிஎஸ் மகன்!

Published : Jan 21, 2021, 12:12 PM IST
எனது சொத்துக்கள் முழுவதையும் ஒப்படைக்கிறேன்... திமுகவுக்கு சவால் விடும் ஓபிஎஸ் மகன்!

சுருக்கம்

தாங்கள் கூறிய அந்த இடத்தில் நாங்கள் உண்மையாகவே சொத்து சேர்த்து இருக்கிறோம் என்று ஆதாரப்பூர்வமாக ஒரு சதுர அடி அளவு கூட நிலம் இருக்கிறது என்று நிரூபித்து விட்டால் நான் எனது சொத்துக்கள் முழுவதையும் அவரிடம் கொடுத்து விடுகிறேன். 

தேனி திமுக வடக்கு மாவட்ட செயலாளர், தங்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓபிஎஸ்ஸின் இளைய மகன் வி.ப.ஜெயபிரதீப் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

குற்றச்சாட்டுகளை நிரூபித்து விட்டால் தனது சொத்துக்கள் முழுவதையும் ஒப்படைத்து விடுவதாக திமுகவுக்கு சவால் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தேனி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் அவர்கள், கடந்த சில தினங்களுக்கு முன்பு நாங்கள் கேரள மாநிலத்தில் ஆயிரம் ஏக்கருக்கு மேல் கோடிக்கணக்கான சொத்துக்களை சேர்த்து வைத்துள்ளோம் என்று அங்கு ஒரு மஞ்சள் பத்திரிகையில் வந்த செய்தியை சுட்டிக்காட்டி பொய் குற்றச்சாட்டுகளை பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருந்தார். இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

அவர் ஒவ்வொரு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பிலும் தமிழக மக்களையும் பத்திரிக்கையை நண்பர்களையும் ஏமாளிகள் என்று நினைத்துக்கொண்டு பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். இதுபோன்ற குற்றச்சாட்டுகளை இதோடு அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும். கேரள மாநிலத்தில் அவர் கூறிய அந்த இடத்திற்கு நான் அவருடன் வரத் தயாராக இருக்கிறேன். எங்களுடன் அவர் பேட்டி கொடுத்த பத்திரிக்கை நண்பர்களும் சாட்சியாக உடன் வர வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

தாங்கள் கூறிய அந்த இடத்தில் நாங்கள் உண்மையாகவே சொத்து சேர்த்து இருக்கிறோம் என்று ஆதாரப்பூர்வமாக ஒரு சதுர அடி அளவு கூட நிலம் இருக்கிறது என்று நிரூபித்து விட்டால் நான் எனது சொத்துக்கள் முழுவதையும் அவரிடம் கொடுத்து விடுகிறேன். அப்படி அவர் கேரள மாநிலத்தில் எனக்கு சொத்துக்கள் இல்லை என்று நிரூபிக்கத் தவறினால் இனிமேல் அவர் பத்திரிக்கையாளர்களை சந்திப்பதை தவிர்க்க வேண்டும், அரசியலிலிருந்து ஓய்வுபெற வேண்டும். அம்மாவின் உண்மை தொண்டர் வி.ப.ஜெயபிரதீப்’ என அவர் தெரிவித்துள்ளார். குறிப்பிட்டுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

Rajini Speech: ரஜினிகாந்த் பேசியதால் பரபரப்பான 10 சம்பவங்கள்... இன்னும் மறக்காத தமிழகம்! ஒரு சுவாரஸ்யமான லிஸ்ட்.!
TASMAC Issue: "மதுவிலக்கு இல்லையா? அப்படின்னா குறைந்தபட்சம் தரமான சரக்காவது கொடுங்க!" – விஜய் அரசுக்கு மக்கள் வைக்கும் 7 கோரிக்கைகள்