"65 பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டுமே உள்ள குழுவுக்காக இரட்டை இலையை முடக்கலாமா?" - சசிகலா வழக்கறிஞர்கள் வாதம்

 
Published : Mar 22, 2017, 01:47 PM ISTUpdated : Sep 19, 2018, 02:44 AM IST
"65 பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டுமே உள்ள குழுவுக்காக இரட்டை இலையை  முடக்கலாமா?" - சசிகலா வழக்கறிஞர்கள் வாதம்

சுருக்கம்

sasi team lawyers arguing against ops lawyers

இரட்டை இலை சின்னம் சசிகலா தரப்புக்கா? அல்லது ஓபிஎஸ் தரப்புக்கா? என்பதை முடிவு செய்யும் வகையில் இரு தரப்பினரும் தங்களது  வழக்கறிஞர்களுடன் டெல்லியில்  தேர்தல்  ஆணையர் முன்பு ஆஜராகி வாதங்களை எடுத்துரைத்து வருகின்றனர்.

முதலில் ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்கள் தங்களுக்கு சாதகமான வாதங்களை எடுத்துரைத்து இரட்டை இலை சின்னம் எங்களுக்கே வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் மோகன் பராசரன், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் உள்ளிட்டோர் தேர்தல் ஆணையர் முன்பு ஆஜராகி வாதிட்டு வருகின்றனர்,

அப்போது 65 உறுப்பினர்கள் ஆதரவு மட்டுமே உள்ள ஒரு குழுவின் வாதத்தை முன்வைத்து அதிமுகவின் சின்னத்தை முடக்குவது சரியல்ல என தெரிவித்தனர்.

ஓபிஎஸ், மதுசூதனன் உள்ளிட்டோர் கட்சியை விட்டு நீக்கப்பட்டு அந்த பதவிக்கு மற்றவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும், கட்சி அமைப்பு ரீதியாக பலமாக செயல்பட்டு வருவதாகவும் தேர்தல் ஆணையத்திடம் கூறப்பட்டது.

மேலும் பெரும்பாலான பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள், 122 எம்எல்ஏக்கள், எம்பிக்கள் தங்களது அணியை ஆதரிப்பதாகவும்  சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் எடுத்துரைத்தனர்.

இதனால் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

ஒவ்வொரு தரப்புக்கும் 90 நிமிடங்கள் வாதம் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டது.

PREV
click me!

Recommended Stories

திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு
திமுகவை நத்தி பிழைப்பதற்காக.. நாயும் பிழைக்கும் இந்த பிழைப்பு..! குருவுக்கு எதிராக அக்னியை கக்கும் நாஞ்சில்