"தேர்தலில் போட்டியிடவே தகுதியில்லாதவர் சசிகலா... அவர் எப்படி தினகரனை தேர்ந்தெடுத்தார்?" - ஓபிஎஸ் வழக்கறிஞர்கள் வாதம்

 
Published : Mar 22, 2017, 01:39 PM ISTUpdated : Sep 19, 2018, 02:44 AM IST
"தேர்தலில் போட்டியிடவே தகுதியில்லாதவர் சசிகலா... அவர் எப்படி தினகரனை தேர்ந்தெடுத்தார்?" - ஓபிஎஸ் வழக்கறிஞர்கள் வாதம்

சுருக்கம்

ops team lawyers argue agains sasikala team in election commission

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு ஆர்,கே.நகர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்ய என்ன அதிகாரம் உள்ளது என தேர்தல் ஆணையம் முன்பு ஆஜரான ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்கள் தங்களது வாதத்தை வைத்தனர்.

இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது குறித்து சசிகலா மற்றும் ஓபிஎஸ் தரப்பினர் மற்றும் அவர்களது வழக்கறிஞர்கள் டெல்லியில் தேர்தல் ஆணையர் முன்பு ஆஜராகி தங்களது வாதங்களை எடுத்துரைத்து வருகின்றனர்

முன்னதாக ஓபிஎஸ் தரப்பு தங்களது வாதங்களை எடுத்துரைத்தனர். ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்கள் குரு கிருஷ்ணகுமார்,மனோஜ் பாண்டியன் ஆகியோர் தேர்தல் ஆணையத்திடம், சசிகலா தற்காலிக பொதுச் செயலாளராக மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். எனவே அவர் நிரந்தரமானவர் அல்ல என்றும், எனவே அவர் எடுக்கும் எந்த முடிவுகளும் செல்லாது என வாதிட்டனர்

சசிகலா ஒரு ஊழல் குற்றவாளி என்றும், அவர் தேர்தலில் 10 ஆண்டுகளுக்கு போட்டியிட முடியாது என்ற நிலை உள்ளபோது, அவர் எப்படி ஆர்,கே,நகர் தொகுதி வேட்பாளரை தேர்ந்தெடுக்க முடியும் என வாதிட்டனர்.

பொதுச் செயலாளருக்கு அடுத்தபடியாக  அதிகாரத்தில் இருக்கும் பொருளாளர், அவைத் தலைவர் போன்றவர்களுக்கு மட்டுமே கட்சியில் எந்த முடிவையும் எடுக்கும் அதிகாரம் உள்ளது எனவும் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து சசிகலா தரப்பு வாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இருதரப்பு வாதங்களும் முடிந்தபின்னர் இரட்டை இலை  சின்னத்தை யாருக்கு ஒதுக்குவது என்பத குறித்து முடிவு செய்யும்… 
 

PREV
click me!

Recommended Stories

திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு
திமுகவை நத்தி பிழைப்பதற்காக.. நாயும் பிழைக்கும் இந்த பிழைப்பு..! குருவுக்கு எதிராக அக்னியை கக்கும் நாஞ்சில்