
இரட்டை இலை சின்னம் தங்களுக்கே வேண்டும் என கூறி, அதிமுகவின் சசிகலா மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டுள்ளனர். இதற்கான இறுதி விசாரணை, தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி முன்னிலையில், இன்று நடந்து வருகிறது.
இதுகுறித்து ஆர்கே நகர் ஓ.பன்னீர்செல்வம், ஆதரவு வேட்பாளர் மதுசூதனன் செய்தியாளர்களிடம் கூறியதாவது.
இரட்டை இலை சின்னம் என்பது எங்களுக்கு கிடைப்பது உறுதி. இதை யாரும் தடுக்க முடியாது. ஓ.பன்னீர்செல்வம் பின்னால் லட்சக்கணக்கான தொண்டர்கள் உள்ளனர்.
கட்சியில் பொதுசெயலாளர் இல்லாத நேரத்தில், அவை தலைவருக்கே உரிமை இருக்கிறது. இதனால், அந்த சின்னத்தில் நான் போட்டியிடுகிறேன்.
சசிகலா தரப்பினர், எவ்வளவு போட்டியிட்டாலும், எங்களுக்க இரட்டை இலை சின்னம் கிடைக்கும். எங்களுக்கே அனைத்து தகுதிகளும் உள்ளன. நாங்கள் தான் உண்மையான அதிமுகவினர்.
தலைமை தேர்தல் ஆணையரிடம், எங்களது வாதங்களை முன் வைத்துள்ளோம். நிச்சயம், ஓ.பன்னீர்செல்வம் அணியினர் வெற்றி பெறுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.