5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒன்னும் தப்பில்லையே..! துணை முதல்வரை சந்தித்து சரத்குமார் அதிரடி..!

By Manikandan S R SFirst Published Jan 31, 2020, 4:40 PM IST
Highlights

5 மற்றும் 8 ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து பேசிய அவர், தேர்வுகள் மாணவர்களின் திறனை அறிவதற்காகவே என்றார். மாணவர்களை அறிவு சோதனை தவறேதும் இல்லை என்றும் அதனால் சில மாற்றங்களை ஏற்று கொள்ளத்தான் வேண்டும் எனவும் சரத்குமார் தெரிவித்தார்.
 

சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சரத்குமார் இன்று சென்னை தலைமை செயலகத்திற்கு வருகை தந்தார். அங்கு துணை முதல்வர் பன்னீர் செல்வதை சந்தித்து உரையாடிய அவர், பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, துணை முதல்வரை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசியதாக சரத்குமார் கூறினார்.

டி.என்.பி.எஸ்.சி விவாகாதாரத்தில் பிரச்சனைகள் பூதாகரமாக தோன்றி வருவதாகவும் அவை குறித்து முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். 5 மற்றும் 8 ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து பேசிய அவர், தேர்வுகள் மாணவர்களின் திறனை அறிவதற்காகவே என்றார். மாணவர்களை அறிவு சோதனை தவறேதும் இல்லை என்றும் அதனால் சில மாற்றங்களை ஏற்று கொள்ளத்தான் வேண்டும் எனவும் சரத்குமார் தெரிவித்தார்.

நடிகர் சங்க தேர்தல் குறித்து செய்தியாளர்கள் சரத்குமாரிடம் கேள்வி எழுப்பிய போது, தான் நடிகர் சங்கத்தில் இருந்து மிக தொலைவில் இருப்பதாக தெரிவித்தார். மேலும் வாழ்க்கையில் நடிக்க தெரியாது என்றும், திரைப்படங்களில் மட்டுமே தனக்கு நடிக்க தெரியும் என்றார். கடந்த 2011 ம் ஆண்டு முதல் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி அதிமுக கூட்டணியில் நீடித்து வருகிறது. 2011 சட்டமன்ற தேர்தலில் தென்காசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சரத்குமார், 2016 தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில் தோல்வியை தழுவியிருந்தார். முன்னதாக 2001 முதல் 2006 வரை ராஜ்யசபா உறுப்பினராகவும் பதவி வகித்திருந்தார்.

Also Read: சென்னைக்கு வரப்போகுது புல்லட் ரயில்..! ரெடியாகும் அதிரடி திட்டம்..!

 

click me!