
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சந்தோஷ்குமார் நடிகர் ரஜினியை பார்த்து நீங்கள் யார்? என கேட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தான் சொன்ன அர்த்தத்தை ஊடகங்கள் மாற்றி வெளியிட்டுவிட்டதாக புலம்ப்த தீர்த்தார்.
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர்களை நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறி, உடல்நலம் விசாரித்தார். அவர்களுக்கு நிதி உதவிகளையும் வழங்கினார். ஆனால் அவரிடம் சந்தோஷ் என்ற இளைஞர் நீங்கள் யார்? என்று கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அனைத்து கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பின் தூத்துக்குடி ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் சந்தோஷ் போராட்டக்காரர்களுக்கு பிஸ்கட், குடிநீர் பாக்கெட்டுகள் வழங்க சென்ற போது துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்தவர். இவர் ரஜினிகாந்த்தை யார் கேட்டதால் ஒரே நாளில் உலக அளவில் பிரபலமடைந்து விட்டார் என்றே கூற வேண்டும்.
ஆனால் ரஜினிகாந்த்தைப் பார்த்து தான் கேட்ட அர்த்தம் வேறு என்றும், ஊடகங்களும், சமூக வலைதளங்களும் பெரிது படுத்திவிட்டதாக கூறுகிறார் சந்தோஷ். ஏற்கனவே தன்னை சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடமும் கேள்விகள் கேட்டேன். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவோம் என்று எழுதிக்கொடுங்கள்’ என்றும் கேட்டேன்.
ஆனால் ரஜினி அரசியலுக்கு வந்து பிரபலமாகவில்லை,,,ஏற்கனவே பிரபலமானவர் தான்…அவர் எங்கள் போராட்டத்துக்கு முன்பே ஆதரவு தெரிவித்திருந்தால் இப்படி ஒரு இழப்பு ஏற்பட்டிருக்காதே என்ற அடிப்படையில்தான் அவரிடம் கேள்விகள் கேட்டதாக கூறினார்.
தான் ஒரு ரஜினி ரசிகர் என்றும், அவர் தூத்துக்குடி வருகிறார் என்றதும், இங்குள்ள மக்கள் மகிழ்ச்சி அடைந்தததை நானும் அறிவேன் என்றும் தெரிவித்த சந்தோஷ், ரஜினி தொடக்கத்திலேயே வந்திருக்க வேண்டும் என தெரிவித்தார். தன்னுடைய கருத்தும், கேள்வியின் நோக்கமும் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
எந்தவித பதற்றமும் எல்லாமல் ரஜினியைப் பார்த்து நேருக்கு நேர் யார் என தில்லாக கேட்ட சந்தோஷ், தற்போது திடீர் என பல்டி அடித்திருப்பது ஏன் என கேள்வி எழுந்துள்ளது.