"காரை வீட்டுக்கு எடுத்து செல்லுங்கள் சம்பத்" - சொன்னார் சசிகலா

First Published Jan 7, 2017, 3:28 PM IST
Highlights


நாஞ்சில் சம்பத் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அரசியல் பணிகளிலிருந்து முற்றிலும் ஒதுங்கி இருந்தார். அதிமுகவில் அமைச்சர்கள் முதற்கொண்டு  கட்சி நிர்வாகிகள் வரை அனைவரும்  சின்னம்மா என்று அழைத்து சசிகலா தான் பொதுச்செயலாளராக வரவேண்டும் என்ற கோரிக்கை வைத்த போது நாஞ்சில் சம்பத் ஒதுங்கியே இருந்தார்.

சசிகலாவை பேட்டிகளில் விமர்சிக்கவும் செய்தார். அதிமுகவில் தான் இணைந்தபோது தனக்கு மறைந்த முதல்வர் அளித்த இன்னோவா காரை திடீரென அதிமுக தலைமை கழகத்தில் திரும்ப ஒப்படைத்தார். 


ஜெயலலிதா தனக்கு பிரச்சாரத்திற்கு அந்த காரை வழங்கியதாகவும், அது முதல் எல்லோரும் தன்னை இன்னோவா சம்பத் என்றே அழைக்க ஆரம்பித்துவிட்டார்கள் . ஜெயலலிதா வழங்கிய கார் வீட்டில் சும்மா தான் நிற்கிறது அந்த காரை திருப்பி அளித்துவிட்டேன் என்று நாஞ்சில் சம்பத் கூறினார். 
இன்று சசிகலாவை சந்தித்த பின்னர்  பேட்டியளித்த சம்பத் சின்னம்மா என்னை அன்பாக வரவேற்றார்கள் , ஏன் காரை கொடுத்தீங்கன்னு கேட்டாங்க , இல்லா போதும்னு நெனைச்சேம்மான்னு சொன்னேன்.
 அதெல்லாம் ஒன்று மில்லை காரை வீட்டுக்கு அனுப்பி வைக்கலாம்னு நினைச்சேன் , காரை எடுத்துட்டு போய்டுங்க நல்லா வேலை செய்யுங்கள் என்றார். என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் மீண்டும் சம்பத் இன்னோவா சம்பத் ஆகிறார்.

click me!