ஜனவரி 17? பிப்ரவரி 24? - தீபா களத்தில் குதிக்கப் போவது எப்போது?

Asianet News Tamil  
Published : Jan 07, 2017, 12:23 PM ISTUpdated : Sep 19, 2018, 02:57 AM IST
ஜனவரி 17? பிப்ரவரி 24? - தீபா களத்தில் குதிக்கப் போவது எப்போது?

சுருக்கம்

ஜெயலலிதாவின் மறைவையடுத்து அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டார். அரசு மற்றும் கட்சி பதவியில் உள்ளவர்கள் மட்டுமே சசிகலாவை ஆதரித்து வருவதாகவும், அடிமட்டத் தொண்டர்களிடையே ஜெயலலிதாவின் ரத்த சொந்தமான தீபா தான் அதிமுக வின் தலைமைப் பொறுப்பேற்க வேண்டும் என கருத்து நிலவுவதாகவும் கூறப்படுகிறது.

தீபா வசித்து வரும் சென்னை தியாகராய நகர் வீட்டை நாள்தோறும் முற்றுகையிட்டு வரும் தொண்டர்கள் உடனடியாக தீபா அரசியலுக்கு வரவேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

தீபாவும் , அவர்களிடம் அவசரப்பட வேண்டாம், அது குறித்து ஆலோசனை செய்து வருகிறேன்.. என்னுடைய அரசியல் பிரவேசத்தை யாராலும் தடுத்துவிட முடியாது என நம்பிக்கை அளித்து வருகிறார்.

இந்நிலையில் எம்.ஜி.ஆர். பிறந்தநாளான ஜனவரி 17-ந்தேதி அல்லது ஜெயலலிதா பிறந்தநாளான பிப்ரவரி 24-ந்தேதி ஆகிய தேதிகளில் ஏதாவது ஒன்றில் அரசியல் களம் காணலாமா என தீபா தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் சென்னையில் ஜெ.தீபா பேரவை அலுவலகம் திறக்க திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தீபா வீட்டுக்கு ஆதரவு தெரிவிக்க வருபவர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்குவதற்காக அவர்களுடைய பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்கள் பதிவு செய்யப்பட்டுவருகின்றன. 

விரைவில் அவர்களுக்கு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, தீபா ஆகியோர் படத்துடன் உறுப்பினர் அட்டை வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

PREV
click me!

Recommended Stories

சோனியாவின் மிரட்டல்... பணிந்த ராகுல்..! கனிமொழி நடத்திய ரகசிய டீலிங்கில் சிக்கிய காங்கிரஸ்..!
பனையூரில் அவமானம்... அறிவாலயத்தில் தஞ்சம்? செங்கோட்டையனின் ‘சைலண்ட்’ மூவ் - அதிர்ச்சியில் விஜய்..!