நேற்று மட்டும்120கோடிக்கு மது விற்பனை.!! தமிழக அரசை தூக்கி நிறுத்திய குடிமகன்கள்.!!

By T BalamurukanFirst Published May 24, 2020, 10:19 PM IST
Highlights

தமிழகத்தில் நேற்றும் மட்டும் 120கோடிக்கு மது விற்பனை ஆகியிருக்கிறது.டாஸ்மாக் நிர்வாகம் குஷியில் இருக்கிறது.  

தமிழகத்தில் நேற்றும் மட்டும் 120கோடிக்கு மது விற்பனை ஆகியிருக்கிறது.டாஸ்மாக் நிர்வாகம் குஷியில் இருக்கிறது.  தமிழகத்தில் கடந்த 16ம் தேதி சென்னை, திருவள்ளூர் மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி கொரோனா தொற்று அதிகமுள்ள பகுதிகள், தொற்று ஏற்படும் அபாயம் உள்ள பகுதிகள் தவிர பிற இடங்களில் 16ம் தேதி காலை 10 மணிக்கு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.

கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்ப்பதற்காக சிவப்பு, மஞ்சள், பச்சை உள்ளிட்ட 7 வண்ணங்களில் டோக்கன் வழங்கப்பட்டது. டோக்கன் வாங்குவதற்காக காலையிலேயே டாஸ்மாக் கடைகள் முன்பு குடிமகன்கள் குவிந்தனர். அவர்களுக்கு உடனுக்குடன் டோக்கன் வழங்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் 10 மணிக்கு கடைகள் திறக்கப்பட்டதும், நீதிமன்ற வழிகாட்டுதலின்படி சமூக இடைவெளியை பின்பற்றி மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டன. இந்நிலையில் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டில் கூடுதலாக கடைகள் திறக்க டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டது. திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டில் 113 மதுக்கடைகள் கூடுதலாக திறக்கப்பட்டதால் விற்பனை அமோகமாக நடைபெற்றது.கலர் டோக்கன் ஜெராக்ஸ் எடுத்து அதை விற்பனை செய்ய ஆரம்பித்தவர்களை போலீஸார் கைது செய்த சம்பவமும் நடந்துள்ளது.

மே 16-ம் தேதி முதல் சென்னை திருச்சி, மதுரை, சேலம், கோவை, மண்டலங்களையும் சேர்த்து நேற்று ரூ.120 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. தடையே மீறி சென்னை மதுப்பிரியர்கள் பக்கத்து மாவட்டங்களுக்கு படை எடுத்து வருகின்றனர். 

click me!