Sasikala: அதிமுகவால் சிக்கலில் சிக்கிய சசிகலா.. முக்கிய உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம்..!

By vinoth kumarFirst Published Jan 13, 2022, 5:49 AM IST
Highlights

பொது செயலாளர் பதவி நீக்கப்பட்டு, அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஒ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்ந்தெடுக்கப்பட்டதை தேர்தல் ஆணையம் ஏற்று கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. 

சசிகலா மீது அதிமுக சார்பில் அளிக்கப்பட்ட புகாரில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து எழுத்து பூர்வமாக விளக்கம் அளிக்க மாம்பலம் காவல் ஆய்வாளருக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.

அதிமுகவின் பொதுச்செயலாளர் என தொடர்ந்து சசிகலா பேசி வருவதாக, கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாம்பலம் காவல் நிலையத்தில் அதிமுக தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார் குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், சசிகலா மீது ஏமாற்றுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க மாம்பலம் காவல் துறைக்கு அறிவுறுத்துமாறு அதிமுக அமைப்பு செயலாளர் ஜெயக்குமார் சார்பில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அதில், பொது செயலாளர் பதவி நீக்கப்பட்டு, அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஒ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்ந்தெடுக்கப்பட்டதை தேர்தல் ஆணையம் ஏற்று கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. கட்சிக்கு உரிமை கோரிய சசிகலாவின் மனுவை தேர்தல் ஆணையம் மற்றும் உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ள நிலையில்,  நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் அளித்த தீர்ப்பை சசிகலா மதிக்காமல் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் மனுவில் குற்றம் சாட்டப்பட்டது. 

இந்த வழக்கை நேற்று சைதாப்பேட்டை நீதிபதி கிருஷ்ணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அதிமுக சார்பில் மாம்பலம் காவல் நிலைத்தில் அளிக்கப்பட்ட புகாரில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை வருகிற 20ஆம் தேதி எழுத்துபூர்வமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று மாம்பலம் காவல் ஆய்வாளருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

click me!