"அரசியலா…? அய்யோ ஆள விடுங்க சாமி…!! - தெறித்து ஓடும் சகாயம் ஐஏஎஸ்

 
Published : May 08, 2017, 11:58 AM ISTUpdated : Sep 19, 2018, 03:15 AM IST
"அரசியலா…? அய்யோ ஆள விடுங்க சாமி…!! - தெறித்து ஓடும் சகாயம் ஐஏஎஸ்

சுருக்கம்

sagayam pressmeet about his political journey

மணல் குவாரிகளைப் போன்று கிராணைட் குவாரிகளையும்  அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று சகாயம் ஐஏஎஸ் யோசனை தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்தும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்தார்.

இதே போன்று கிரானைட் குவாரிகளையும் அரசே ஏற்று நடத்தவேண்டும் என்று அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

விவசாயிகள் அரசின் முதுகெலும்பு என்றும், அவர்களின் பிரச்னையை தீர்ப்பதற்கு,அரசு நடவடிக்கை எடுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். விவசாயிகள் தங்கள் பணிகளை சிறப்பாக செய்ய வேண்டும் என்றால், அரசு ஏரி, குளம் மற்றும் கண்மாய்களை முறையாக பராமரிக்க வேண்டும் என்று சகாயம்  தெரிவித்தார்.

தனது தலைமையின் கீழ் இயங்கும், இளைஞர் அமைப்பு சமூக சிந்தனை கொண்டதாகவே இருக்கும் என்றும், அரசியலில் ஈடுபடும் எண்ணம் எதுவுமில்லை என்றும் சகாயம் ஐஏஎஸ் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

தேவாலயத்திற்குச் சென்று கிறிஸ்துமஸ் பிரார்த்தனையில் பங்கேற்ற பிரதமர் மோடி..!
தேர்தல் செலவுக்கு மண் திருடும் மாஃபியாக்கள்..! ஸ்வீட்பாக்ஸில் கொழிக்கும் அதிகாரிகள்..!