விஸ்வரூபம் எடுக்கும் சாதிக் பாட்ஷா மர்ம மரண விவகாரம்... நடுநடுங்கும் திமுக தலைமை..!

By Thiraviaraj RMFirst Published Apr 12, 2019, 5:08 PM IST
Highlights

’’தனது கணவர் சாதிக் பாட்ஷா மரணத்தில் திமுக தலைவர்கள் சிலருக்கும் தொடர்பு இருக்கும் என சந்தேகப்படுவதால் அவர்களை விசாரிக்க உத்தரவிட வேண்டும்’’ என சாதிக் பாட்சா ரெஹானா பானு ஜனாதிபதியிடம் நேரில் சென்று புகார் அளித்துள்ளார்.

’’தனது கணவர் சாதிக் பாட்ஷா மரணத்தில் திமுக தலைவர்கள் சிலருக்கும் தொடர்பு இருக்கும் என சந்தேகப்படுவதால் அவர்களை விசாரிக்க உத்தரவிட வேண்டும்’’ என சாதிக் பாட்சா ரெஹானா பானு ஜனாதிபதியிடம் நேரில் சென்று புகார் அளித்துள்ளார்.

பெரம்பலூரை சேர்ந்த சாதிக் பாட்சா முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் நெருங்கிய நண்பர். 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் முக்கிய சாட்சியாகவும் இருந்தவர். சிபிஐ விசாரணை வளையத்திற்குள் இவர் கொண்டு வரப்பட இருந்த நிலையில் மர்மமான முறையில் சாதிக் பாட்சா மரணம் அடைந்தார். அவரது மரணம் தற்கொலை வழக்காக மாற்றப்பட்டது. ஆனால், மரணத்தில் சந்தேகம் உள்ளதாக அவரது குடும்பத்தினர்  சந்தேகம் கிளப்பி வருகின்றனர். 

இதனை தொடர்ந்து ரெஹனா பானு, ஜனாதிபதியிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், ’’எனது கணவரது மர்ம மரணத்தை மீண்டும் விசாரிக்க வேண்டும். என் மீது தாக்குதல் நடத்த முயன்றவர்கள்தான் என் கணவரின் இறப்புக்கும் காரணமாக இருக்க வேண்டும். என் கணவரின் மர்ம மரணம் தொடர்பாக மீண்டும் விசாரிக்க வேண்டும். என் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து தீர விசாரித்தாலே, இதன் பின்புலத்தில் உள்ள அரசியல் சக்திகளைக் கண்டுபிடித்துவிடலாம்.

2ஜி வழக்கு விசாரணையின்போது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஆ.ராசா ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிட்டு என் கணவர் சில தகவல்களைக் கூறினார். அதை அடிப்படையாக வைத்து விசாரணையை மேற்கொண்டால், என் கணவரின் இறப்புக்கு யார் காரணம் என்பதைக் கண்டுபிடித்துவிடலாம். எனக்கும், என் குடும்பத்தாருக்கும் நீதி கிடைக்க உதவுவீர்கள் என நம்புகிறேன்" என கேட்டுக் கொண்டுள்ளார்.

தேர்தல் நேரத்தில் அவர் ஜனாதிபதியிடம் மனு அளித்துள்ளது திமுக வட்டாரத்தை கலக்கப்படுத்தி வருகிறது. 

click me!