" Saddist முதல்வர் மு.க ஸ்டாலின் ".. முதலமைச்சரை மோசமாக விமர்சித்த ஜெயக்குமார் மகன்..

Published : Feb 23, 2022, 04:22 PM ISTUpdated : Feb 23, 2022, 07:00 PM IST
" Saddist முதல்வர் மு.க ஸ்டாலின் ".. முதலமைச்சரை மோசமாக விமர்சித்த ஜெயக்குமார் மகன்..

சுருக்கம்

மேலும், வழக்கை மாற்றி ஒரு நாடக்கத்தை நீதிமன்றத்தில் தி.மு.க தரப்பு அரங்கேற்றி உள்ளதாகவும், சட்டப்போரட்டம் மூலம் தங்களுக்கு நியாயம் கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

பாசிச தி.மு.க அரசு வேண்டுமேன்றே தன் தந்தை மீது பொய் வழக்கு போட்டுள்ளதாக முன்னாள் நாடளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சர் ஜெயகுமாரின் மகனுமான ஜெயவர்தன் தெரிவித்துள்ளார். திமுக பிரமுகரை அரை நிர்வாணப்படுத்தி தாக்கிய வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயகுமாரின் ஜாமின் மனு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இரு தரப்பு வாதங்களையும் கேட்ட 16வது குற்றவியல் நீதிமன்ற நடுவர் தயாளன் வழக்கை ஒத்திவைத்தார். 

அதனைத் தொடர்ந்து ஜார்ஜ் டவுன் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜெயகுமாரின் மகனுமான ஜெயவர்தன், மு.க ஸ்டாலின் திட்டமிட்டு பொய் வழக்கு போட்டுள்ளார் எனவும் தேர்தலன்று பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய கைதேர்ந்த ரவுடி, 420, கிரிமினலை தான் தனது தந்தை பிடித்து கொடுத்துள்ளார் எனவும் தெரிவித்தார். மேலும், தங்களுடைய வாகன ஓட்டுனர் கடுமையாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகக் கூறிய அவர், இப்படி 420,சமூக விரோதிகளை தி.மு.க ஊக்குவிக்கிறதா? எனவும் கேள்வி எழுப்பினார். 

அதுமட்டுமல்லாமல் தங்கள் கட்சியினரை அச்சுறுத்த வேண்டும், பயமுறுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் வழக்கை மாற்றியுள்ளனர் எனவும், அதற்கு அ.தி.மு.க ஒருபோது அஞ்சாது எனவும் அவர் கூறினார்.மேலும், வழக்கை மாற்றி ஒரு நாடக்கத்தை நீதிமன்றத்தில் தி.மு.க தரப்பு அரங்கேற்றி உள்ளதாகவும், சட்டப்போரட்டம் மூலம் தங்களுக்கு நியாயம் கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், தாங்கள் எந்த தவறும் செய்யவில்லை என்பதால் தங்களுக்கு எந்த பயமும் இல்லை எனவும், நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது எனவும், பாசிச அரசாங்கமான தி.மு.க அரசுக்கும், Saddist முதல்வரான மு.க ஸ்டாலினுக்கும் மக்கள் நலன் மீது சிறிதும் அக்கறை இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

சுய விளம்பரத்தில் திளைக்கும் முதல்வரே... இருக்கப் போகும் 4 மாதங்களிலாவது கவனம் செலுத்துங்கள்..! க்ரைம் பட்டியலை அடுக்கிய இபிஎஸ்..!
முதல்வருக்கு எதிராக கோஷம் எழுப்பிய MLA மகன்..? வீடியோ வெளியிட்டு அண்ணாமலை விமர்சனம்