சசிகலா எண்ட்ரிக்காக காத்திருக்கும் அதிமுக..? இரட்டைத் தலைமையில் தொண்டர்கள் அதிருப்தியா..?

Published : Feb 23, 2022, 04:04 PM IST
சசிகலா எண்ட்ரிக்காக காத்திருக்கும் அதிமுக..? இரட்டைத் தலைமையில் தொண்டர்கள் அதிருப்தியா..?

சுருக்கம்

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு வந்த ஒவ்வொரு தேர்தலிலும் அதிமுக தொடர்ந்து பின்னடைவுகளையே சந்தித்து வருகிறது. நாடாளுமன்ற தேர்தலில் 39 இடங்களில் தோல்வி, சட்டமன்றத்தில் ஆளுங்கட்சி அந்தஸ்தை இழந்தது என ஒன்றன் பின் ஒன்றாக தோல்வியை சந்தித்து வந்த அதிமுகவிற்கு இமாலய தோல்வியாக இடியை இறக்கியுள்ளது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தோல்வி.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு வந்த ஒவ்வொரு தேர்தலிலும் அதிமுக தொடர்ந்து பின்னடைவுகளையே சந்தித்து வருகிறது. நாடாளுமன்ற தேர்தலில் 39 இடங்களில் தோல்வி, சட்டமன்றத்தில் ஆளுங்கட்சி அந்தஸ்தை இழந்தது என ஒன்றன் பின் ஒன்றாக தோல்வியை சந்தித்து வந்த அதிமுகவிற்கு இமாலய தோல்வியாக இடியை இறக்கியுள்ளது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தோல்வி.

சட்டமன்றத் தேர்தலில் பாமக, பாஜக கட்சிகளோடு இணைந்து போட்டியிட்ட அதிமுக வெற்றி வாய்ப்பை இழந்தாலும் எதிர்க்கட்சியாக அந்தஸ்தை பெற்றது. குறிப்பாக கொங்கு மண்டலத்தில் பெற்ற வெற்றி உதவியாக அமைந்தது.
இந்தநிலையில்  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக  உள்ளிட்ட கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்டன. இதில் சராசரியாக 15 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்று, தனது 22 இரண்டு சதவீத வாக்கு வங்கியை இழந்து நிற்கிறது அதிமுக.

அதிமுகவின் தோல்விக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. குறிப்பாக சசிகலா சமுதாயத்தை சேர்ந்தவர்கள் அதிகம் உள்ள தென் மாவட்டங்களில் வாக்குகள் பெரும் அளவில் பிரிந்து சென்றுள்ளது.
குறிப்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வத்தின் சொந்த மாவட்டத்திலேயே அதிமுக பின்னடைவை சந்தித்துள்ளது. இந்த மாவட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 2 இடங்களில் வெற்றியைப் பெற்றுள்ளது. இதேபோல தூத்துக்குடி, சிவகங்கை உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பெரிய அளவிலான வெற்றியை பெறாவிட்டாலும்,  அதிமுகவின் தோல்விக்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது.

கொங்கு மண்டலத்தை தனது கோட்டையாக கூறி வந்த அதிமுகவுக்கு, அங்கும் படுதோல்வி கிடைத்திருப்பதால், குறிப்பாக எடப்பாடி  பழனிசாமியின் வீடிருக்கும் தெருவே திமுகவிடம் சென்றிருப்பதால், அவர் மீதான நம்பிக்கையும் அதிமுக தொண்டர்களுக்கு குறைந்துள்ளதாம்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வத்தால் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட அவரது சமுதாய ஓட்டுகளும் அமமுகவால் பிரிக்கப்படுகிறது. இதனால் அதிமுகவில் யார் யாரை நம்புவது, யார் பக்கம் நிற்பது என தொண்டர்கள் மத்தியில் மட்டுமில்லாமல் நிர்வாகிகளையும் குழப்பமடைய செய்துள்ளது.

எனவே போர்கால நடவடிக்கையில்  இரட்டை இலை சின்னம் கொண்ட அதிமுகவுக்கு நிரந்தர மற்றும் வலுவான தலைமை அமைந்து வெற்றி பெறும்  ஓட்டுகள் சிதறாமல் கிடைக்க  அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதை ஒவ்வொரு தொண்டர்களின் விருப்பமாக உள்ளது. இதற்கு சசிகலா சரியான தலைவியாக இருப்பார், ”அம்மாவின் நிழலாக இருந்து அரசியல் செய்தவர், அவர்தான் இந்த நிலையில் சரியான தலைமையை தரமுடியும்” என்ற பேச்சும் அடிமட்ட தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

பொறுத்திருந்து பார்ப்போம்…

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!