இன்பநிதி பெயரில் பாசறை தொடங்கியதால் நீக்கப்பட்ட திமுக நிர்வாகி அதிமுகவில் இணைந்தார்..!

By vinoth kumar  |  First Published Jan 28, 2024, 11:54 AM IST

தமிழக விளையாட்டுத் துறை அமைச்சரும், திமுக இளைஞரணி மாநில செயலாளருமான உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதி பெயரில் 'இன்பநிதி பாசறை' தொடங்கி, புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் போஸ்டர் அடித்து ஒட்டினர். இது பெரும் சர்ச்சையானது. 


இன்பநிதிக்கு பாசறை அமைத்த சர்ச்சையால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட திருமுருகன் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். 

புதுக்கோட்டை திமுக வடக்கு மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவையின் துணை அமைப்பாளர் க.செ.மணிமாறன், மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் மு.க.திருமுருகன் ஆகியோர் தமிழக விளையாட்டுத் துறை அமைச்சரும், திமுக இளைஞரணி மாநில செயலாளருமான உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதி பெயரில் 'இன்பநிதி பாசறை' தொடங்கி, புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் போஸ்டர் அடித்து ஒட்டினர். இது பெரும் சர்ச்சையானது. 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- மதுரை திமுக பிரமுகர் கொடூரமாக வெட்டி படுகொலை.. அரசியல் முன் விரோதம் காரணமா?

இதையடுத்து கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையிலும் நடந்து கொண்டதாக திருமுருகன், மணிமாறன் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் கடந்த செப்டம்பர் மாதம் அறிவித்திருந்தார்.

இதையும் படிங்க;- இதுதான் அரசியல் நடைமுறை.. ஜால்ரா போடுவர்களை நம்பாதீங்க.. எடப்பாடியை எச்சரிக்கிறாரா பூங்குன்றன்?

இந்நிலையில், திமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிர்வாகி திருமுருகன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். 

click me!