காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதி.? திமுக கொடுக்கவுள்ள தொகுதிகள் எத்தனை- இன்று தொடங்குகிறது பேச்சுவார்த்தை

By Ajmal Khan  |  First Published Jan 28, 2024, 10:35 AM IST

நாடாளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், திமுக- காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்று தொடங்குகிறது. கடந்த தேர்தலை போல் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதி வழங்கப்படுமா.?அல்லது குறைவாக வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 
 


சூடு பிடிக்கும் நாடாளுமன்ற தேர்தல்

நாடாளுமன்ற தேர்தல் தேதி இன்னும் ஒரு சில வாரங்களில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அரசியல் கட்சிகள் தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளது. 3வது முறையாக ஆட்சியை கைப்பற்ற பாஜக திட்டம் வகுத்துள்ளது. இதற்காக கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக ஒவ்வொரு மாநிலத்திலும் வெற்ற பெற வேண்டிய தொகுதியை இலக்காக வைத்து களப்பணி மேற்கொண்டு வருகிறது. இதனிடையே பாஜகவிற்கு எதிராக எதிர்கட்சிகள் ஒன்றினைந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கியுள்ளது. அந்த கட்சிகளும் தேர்தலை ஒன்றிணைந்து செயல்பட திட்டமிட்டது. ஆனால் ஒரு சில கட்சிகள் தற்போது தனித்து போட்டியிட போதாக அறிவித்துள்ளது.

Tap to resize

Latest Videos

தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை

இந்த தேர்தல் பரபரப்புக்கு மத்தியில் தமிழகத்தில் முதல் ஆளாக தேர்தல் பணியை திமுக ஏற்கனவே தொடங்கியது. ஒருங்கிணைப்பு குழு. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தொகுதி பங்கீட்டு குழு அமைக்கப்பட்டது. இதனையடுத்து தேர்தல் அறிக்கை மற்றும் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்ற நிலையில், தற்போது தொகுதி பங்கீடு குழுவானது இன்று முதல் கூட்டணி கட்சியுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், சிபிஎம், சிபிஐ, மதிமுக, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளது.  இன்று மாலை 3 மணிக்கு காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்ட்டுள்ளது. கடந்த தேர்தலில் புதுச்சேரி உட்பட 10 தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதில் தேனியை தவிர மற்ற 9 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.

காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதி.?

  எனவே இன்று நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 10 இடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது கூடுதலாக 12 தொகுதிகள் கேட்கப்படும் என காங்கிரஸ் தரப்பில் இருந்து கூறப்பட்டு வருகிறது. ஆனால் திமுகவோ காங்கிரஸ் கட்சிக்கு 8 அல்லது 9 தொகுதிகளை மட்டுமே வழங்க திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.

முதல் கட்டமாக எந்த எந்த தொகுதி, எத்தனை தொகுதி என்ற பட்டியலை காங்கிரஸ் கட்சி திமுக குழுவிடம் வழங்கும் வழங்கும். இதனையடுத்து திமுக தலைவருக்கு காங்கிரஸ் கட்சி கேட்கும் தொகுதி விவரங்களை அளித்து இரண்டு அல்லது 3வது கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகே தொகுதி இறுதி செய்யப்படும் என கூறப்படுகிறது.  இன்றைய பேச்சுவார்த்தைக்கு பிறகு மற்ற கூட்டணி கட்சிகளோடு தொகுதி பங்கீடு தொடர்பாக ஆலோசனை நடத்தப்படும் என தெரிகிறது.

இதையும் படியுங்கள்

தமிழ்நாடு, புதுச்சேரியில் பாஜகவின் கனவு பலிக்காது... இந்தியா கூட்டணியே வெல்லும்- ராஜகண்ணப்பன் சூளுரை

click me!