இதுதான் அரசியல் நடைமுறை.. ஜால்ரா போடுவர்களை நம்பாதீங்க.. எடப்பாடியை எச்சரிக்கிறாரா பூங்குன்றன்?

Published : Jan 28, 2024, 10:13 AM IST
இதுதான் அரசியல் நடைமுறை.. ஜால்ரா போடுவர்களை நம்பாதீங்க.. எடப்பாடியை எச்சரிக்கிறாரா பூங்குன்றன்?

சுருக்கம்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்தவர் பூங்குன்றன். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அதிமுக கட்சியில் இருந்து ஒதுங்கி இருந்து வருகிறார். இருப்பினும் அவ்வப்போது முகநூல் பக்கத்தில் அதிமுக நிலை குறித்தும், தமிழக அரசியல் நிலவரம் குறித்தும் பல்வேறு பதிவுகளை செய்து வருகிறார். 

அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் தனித்தனி அணியாக செயல்பட்டு வரும் நிலையில் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனின் முகநூல் பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்தவர் பூங்குன்றன். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அதிமுக கட்சியில் இருந்து ஒதுங்கி இருந்து வருகிறார். இருப்பினும் அவ்வப்போது முகநூல் பக்கத்தில் அதிமுக நிலை குறித்தும், தமிழக அரசியல் நிலவரம் குறித்தும் பல்வேறு பதிவுகளை செய்து வருகிறார். இந்நிலையில் பூங்குன்றன் வெளியிட்டுள்ள பதிவில்;- என்னுடைய அரசியல் அனுபவத்தில் பல்வேறு நிகழ்வுகளை கேட்டதுண்டு. பல்வேறு நிகழ்வுகளை நேரிலே பார்த்ததுண்டு. அம்மாவுடன் பயணித்த போது நான் சொன்ன நல்லதைக் கேட்டு பலருடைய வாழ்வு உயர்ந்ததும் உண்டு, கேட்காததால் தாழ்ந்ததும் உண்டு. 

இதையும் படிங்க;- இப்படி ஒரு ஆற்றல்மிகு உடன்பிறப்பை அதிமுக கைவிட்டதே.. இவரை பாஜக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.. பூங்குன்றன்..!

ஒரு அரசியல்வாதி தேர்தலில் நிற்கிறார் என்றால் அவரைச் சுற்றி பாராட்டுவதற்கும், ஜால்ரா போடுவதற்கும் ஒரு பெரிய கூட்டமே இருக்கும். வேட்பாளரிடம் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் அண்ணன் நீங்கள் வெற்றி பெறுவீர்கள் என்பார் ஒருவர். அண்ணன் நீங்கள் ஒரு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் என்பார் மற்றொருவர். உங்களை வேட்பாளராக அறிவித்த பிறகு மக்கள் எல்லாம் உங்கள் பக்கம் திரும்பிவிட்டார்கள், நீங்கள் மகத்தான வெற்றி பெற போகிறீர்கள் என்பார் இன்னொருவர். இப்படியெல்லாம் அவரை உசுப்பேத்தி உசுப்பேத்தி அவரை வெற்றி பெற்றதாகவே நினைக்க வைத்து விடுவார்கள். நடப்பவற்றையெல்லாம் கவனித்துக் கொண்டு இருப்பான் ஒரு விசுவாசி. 

அவன் தயங்கி தயங்கி தைரியத்தை வரவழைத்துக்கொண்டு வேட்பாளரிடம் சென்று அண்ணா தப்பா எடுத்துக்காதீங்க. இவங்க சொல்றதெல்லாம் கேட்காதீங்க. ரொம்ப  சிரமமாக இருக்கு. நம்ம கவனமா செயல்பட்டால் தான் வெற்றி பெறமுடியும் என்று சொல்வார். வேட்பாளர் அவரை அலட்சியமாக பார்ப்பார். உடனே பக்கத்தில் இருப்பவர்கள் அவனை வசைபாடத் தொடங்குவார்கள். உண்மையைச் சொன்ன விசுவாசியை ஒதுக்கி வைத்துவிடுவார்கள். ஒதுக்கபட்டாலும் வேட்பாளருக்காக தேர்தலில் உயிரைக் கொடுத்து வேலை செய்வார் அந்த விசுவாசி. தேர்தலில் அந்த வேட்பாளர் தோற்றுவிடுவார். அவருக்கு அப்போதுதான் நினைவுக்கு வருவான் அந்த விசுவாசி. உடனே அவனை கூப்பிடச் சொல்லுவார். தன் குடும்பத்தினரிடம் அவன் ஒருவன்தான் உண்மையைச் சொன்னான் என்பார். அவன் ஓடிவந்து அந்த வேட்பாளரை பார்க்கும்போது, 50 ஆயிரம் ஓட்டுகள், ஒரு லட்சம் ஓட்டுக்கள், மக்கள் உங்கள் பக்கம் திரும்பிவிட்டார்கள் என்று சொன்னவர்கள் எல்லாம் வெற்றி பெற்றவர்களிடம் சென்று சேர்ந்திருப்பார்கள். 

இதுதான் அரசியல் நடைமுறை. இதற்கு எத்தனையோ பேரை நான் எடுத்துக்காட்டாகச் சொல்லமுடியும். நானே இவ்வாறு பலரிடம் தகவல் சொல்லி வெற்றி பெற்றவர்களும் உண்டு, கவனக்குறைவால் தோற்றவர்களும் உண்டு. ஒன்றை மட்டும் நீங்கள் நன்றாக கவனிக்க வேண்டும். அந்த விசுவாசி, வேட்பாளரிடம் நீங்கள் தோற்கப் போகிறீர்கள் என்று சொல்லவில்லை. நீங்கள் கவனமாக இருந்தால்தான் வெற்றி பெறமுடியும் என்று சொன்னார். இதை சரிவர புரிந்து கொள்ளாமல் அவனை வசைபாடியவர்கள் பலர். விசுவாசி சொன்னதை வேட்பாளர் கேட்டிருந்தால் நிச்சயம் வெற்றி பெற்றிருப்பார். வியூகங்களை மாற்றிக் கொண்டிருந்தால் ஜெயித்திருப்பார். 

இதையும் படிங்க;- வரும் மக்களவைத் தேர்தலில் டிடிவி. தினகரன் போட்டியா? எந்த தொகுதியில்? அவரே சொன்ன தகவல்..!

பயனடைந்து உடன் இருப்பவர்களுக்குத் தெரியாமல் உண்மையானவர்களை கலந்தாலோசிப்பதே வெற்றிக்கான வழி..! அதுபோல உங்களோடு இருப்பவர்களை வசைபாடாமல், எதிர்க்கட்சிகளை வசைபாடத் தொடங்கினாலும் அது வெற்றிக்கு உங்களை அழைத்துச் செல்லும்..! அரசியலில் உண்மையைச் சொல்வதற்கு தான் தைரியம் வேண்டும். எதையும் எதிர்பார்க்காமல் கழகத்தை நேசிப்பவனால் தான் அவ்வாறு நடந்து கொள்ளமுடியும். உண்மை கசக்கத்தான் செய்யும். என்ன செய்ய .! கசப்பான மருந்தை உட்கொண்டால்தானே நோய் குணமாகும் என பூங்குன்றன் கூறியுள்ளார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

vande mataram: வந்தே மாதரம்தான் நம் விசுவாசத்தின் அடையாளமா..? தேசபக்தியை மதத்துடன் இணைக்காதீர்கள்..! ஒவைசி எச்சரிக்கை..!
திமுக ஆட்சியில் அதிகாரிகளின் ராஜ்ஜியம் நடக்கிறது..! வெறுப்பில் அதிமுகவில் இணைந்த செங்கோட்டையன் அண்ணன் மகன்..!