ஒரு வட்ட செயலாளராக கூட இருக்க தகுதி இல்லாதவர் தான் ஆளுநர் ரவி.. அவருக்கு ராஜ்பவன் எதற்கு.? சீறும் காங்கிரஸ்

By Ajmal Khan  |  First Published Jan 28, 2024, 7:05 AM IST

வரலாற்று திரிபுகளை தொடர்ந்து ஏற்படுத்தி கொண்டு இருக்கிறார் ஆளுநர், தமிழ்நாடு ஆளுநர் ரவி ஜனாதிபதி உடனடியாக திரும்பப் பெற வேண்டும் இல்லை என்றால் வெகுஜன போராட்டம் வெடிக்கும் என காங்கிரஸ் சார்பாக நடைபெற்ற போராட்டத்தில்  எச்சரிக்கை விடுக்கப்பட்டது.  


ஆளுநர் சர்ச்சை பேச்சு- காங்கிரஸ் போராட்டம்

மகாத்மா காந்தியடிகளை கொச்சைப்படுத்தி பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை கண்டித்து சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 300க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு தமிழக ஆளுநர் ரவிக்கு எதிராக கைகளில் பதாகைகளை ஏந்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Tap to resize

Latest Videos

தொடர்ந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, ஆளுநர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால் போலீஸ் அதை விசாரிக்குமா? மகாத்மா காந்திக்கு ஆள் இல்லை என்று நினைக்கிறீர்களா, ஜாதி பலம் இல்லை என்று நினைக்கிறீர்களா, ஜாதி தலைவர்களை பார்த்து தான் தமிழ்நாடு போலீஸ் பயப்படும் மற்றவர்களுக்கு பயப்படாதா, ஆளுநர ரவி அவர் தமிழகம் வரும் போதே நான் சொன்னேன், அவர் கல்வியாளர் கிடையாது, உளவு பார்ப்பவர்,  

அயோத்தியில் மசூதியை இடித்தது ஏன்.?

நேதாஜி சுதந்திரத்தில் சம்பந்தமில்லை என்று நாங்கள் சொல்லவில்லை, உங்களிடம் தலைவர்கள் இல்லை அதனால் எங்கள் தலைவரிடம் சண்டை போட்டுக் கொள்கிறீர்கள், துரோக வரலாற்றை தவிர்த்து உங்களுக்கு வேறு எதுவும் கிடையாது, மகாத்மாவோடு வாதம் செய்து வெற்றி பெற முடியாது, மகாத்மாவோடு போராடி வெற்றி பெற முடியாது, மகாத்மாவோடு தியாகம் செய்து வெற்றி பெற முடியாது, கோபுரம் இல்லாத கோவிலுக்கு, கும்பாபிஷேகம் நடந்து பார்த்தது உண்டா, அயோத்தியில் 3 ஆயிரத்துக்கும் அதிமான ராமர் கோவில் உள்ளது,  3021 ஆவது கோவில் தான் அயோத்தியில் மோடி கட்டி உள்ள கோவில். 3 கி.மீட்டார்  தள்ளி தான் ராமர் கோவிலை கட்டி உள்ளீர்கள், அதற்க்கு எதுக்கு மசூதியை நீங்கள் இடித்தீர்கள். 


வட்ட செயலாளருக்கு கூட தகுதி இல்லை

முன்னதாக பேசிய காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் செல்வப் பெருந்தகை,  முதல்வர் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள், ஆங்கிலேயர்கள் தான் ஆளுநர் மாளிகையில் தங்கி இருந்தனர். ரவி ஏன் ஆளுநர் மாளிகையில் தங்க வேண்டும், அவருக்கு பசுமை வழி சாலையில் இடம் கொடுங்கள். ஆளுநருக்கு முதலில் வரலாறு தெரியாது, ரவிக்கு ஒரு மார்க் கூட போட முடியாது அவர் படித்தாரா இல்லை என்று தெரியவில்லை எந்த ஒரு தகுதியும் இல்லாதவர் ஆளுநர்.

ஒரு வட்ட செயலாளராக கூட இருக்க தகுதி இல்லாதவர் ஆளுநர் ரவி. வரலாற்று திரிபுகளை தொடர்ந்து ஏற்படுத்தி கொண்டு இருக்கிறார் ஆளுநர், தமிழ்நாடு ஆளுநர் ரவி ஜனாதிபதி உடனடியாக திரும்பப் பெற வேண்டும் இல்லை என்றால் வெகுஜன போராட்டம் வெடிக்கும் என்று எச்சரிக்கை விடுத்தார். 

click me!